பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 6t குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்று கூறிவிட்டார். இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இந்திரன் விரும்பியதால் அனைத்துத் தீர்த்தங்களையும் தன்னிடம் வருமாறு ஆணை யிட்டான். இந்திர சபையில் கங்கை, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, புண்யா, காவேரி ஆகிய 58 தீர்த்தங்களுக்கும் தலைவி களாகிய பெண்களும், பிரயாகை, வாரணாசி, அவந்தி, புஷ்கரா, மதுரா முதலிய 10 நகரங்களின் தலைவிகளும் வந்து நின்றனர். இந்திரன் அவர்களைப் பார்த்துப் பெண் கொலை, சிசுக் கொலை, பிராமணக் கொலை, பசுக் கொலை முதலிய பெரும் பாவங்களைச் செய்தவர்களுள் உங்களில் யாரிடம் வந்தால் அனைத்துப் பாவங்களையும் தீர்க்க முடியும் என்பதை எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றான். அவர்கள் இத்தனையும் தீர்க்கும் ஒரே தீர்த்தத்தையோ ஒரே நகரையோ எங்களால் குறிப்பிட்டுக் காட்ட முடியாது. ஒன்றை மட்டும் சொல்ல முடியும். மிகவும் தெய்வீகமானது என்று சொல்லக் கூடியவை பிரயாகை, புஷ்கரா, அர்க்ய தீர்த்தா, வாரணாசி என்பனவாகும். இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு ஒரு கதையும் உண்டு. பாஞ்சால நாட்டில் வாழ்ந்த விதுரன் மிக்க கோபத்தால் ஒரு பிராமணனைக் கொன்று விட்டான். அதன்பிறகு தன் பாவத்தைப் போக்கிக் கொள்ளத் தீர்த்த யாத்திரை புறப்பட்டான். போகும் வழியில் தன் ஆசிரியரைக் கொன்ற சந்திரசர்மா என்பவனைச் சந்தித்து இருவருமாக யாத்திரை தொடங்கினர். மணம் செய்து கொள்ளக் கூடாத பெண்ணை மணம் செய்து கொண்ட வேதசர்மா என்பவனும் இந்த இருவருடன் சேர்ந்து கொண்டான். வஞ்சுலா என்ற குடிகாரனும் இம்மூவருடன் சேர நால்வரும் தங்கள் பாவம் போக்கும் தீர்த்தத்தை நாடிச் சென்றனர். இந்த நால்வரும் வழியில் ஒரு முனிவரைச் சந்தித்துத் தங்கள் கதைகளைச்