பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பதினெண் புராணங்கள் சொல்லி எந்தத் தீர்த்ததில் நீராடினால் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள முடியும்? என்று கேட்டனர். அவர் பிரயாகை, புஷ்கரா, அர்க்யதீர்த்தா, வாரணாசி என்ற நான்கையும் கூறி அங்கே சென்றால் உங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்ளலாம் என்றனர். இவர்கள் நால்வரும் அங்கெல்லாம் சென்று நீராடினர். அவர்கள் பாவம் போக வில்லை. அதன் எதிராக, இவர்கள் பாவம் காரணமாக அந்த நான்கு இடங்களும் தூய்மையை இழந்தன. இந்த நான்கு தீர்த்தங்களும் கறுப்பு அன்னங்களாக வடிவெடுத்து, இந்த பாபிகளைப் பின் தொடர்ந்தன. இந்த நால்வரும் எங்கெங்கு சென்று குளித்தார்களோ அந்தத் தீர்த்தங் களெல்லாம் பாவப்பட்டுக் கறுப்பு அன்னங்கள்ாக மாறி இவர்களைப் பின் தொடர்ந்தன. இவர்கள் நீராடாத தீர்த்தங்களும் என்ன நடக்கிறதென்று பார்க்கத் தாங்களும் அன்னப்பறவை வடிவெடுத்து இவர்களைத் தொடர்ந்தன. இவர்கள் பாவம் படாததால் அவை வெண்மையான அன்னமாக இருந்தன. இந்த முறையில் 64 தீர்த்தங்கள் கறுப்பும் வெள்ளையுமான 64 அன்னங்களாக இந்த நால்வரைத் தொடர்ந்தன. இறுதியாக, இந்த நால்வரும் மிகப் புனிதமான மானசரோவர் நதியில் குளிக்க மானசரோவரும் தூய்மை கெட்டு அதுவும் ஒரு கரிய மிகப் பெரிய அன்னப்பறவையாக வடிவெடுத்தது. இறுதியாக இந்த நான்கு பாபிகளும் நர்மதா நதியும், ரேவா நதியும் சங்கமம் ஆகின்ற இடத்தில் குளித்தனர். உடனே அவர்கள் பாவங்கள் அவர்களை விட்டு நீங்கின. இதைப் பார்த்த கறுப்பு அன்ன வடிவில் இருந்த ஏனைய தீர்த்தங்களும் அங்குக் குளித்தவுடன் தூய்மையான நிறம் பெற்றன. மானசரோவரில் நின்று அழுது கொண்டிருந்த