பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 63 நான்கு பெண் பூதங்களும் இங்கு குளித்தவுடன் பாவங்கள் நீங்கி இறந்தனர். இந்த இடம் 'குப்ஜ தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. மகனே! நீ பார்த்த காட்சி இதுதான் என்பதை இப்பொழுது அறிந்து கொண்டிருப்பாய். இது ஒரு உருவகக்கதை (allegory) என்பதை நீ அறிய வேண்டும்” என்று தந்தைக் கிளி கூறி முடித்தது. மூன்றாவது கிளிக்குஞ்சு சொன்ன கதை தந்தைக் கிளியான குஞ்சலா தனது மூன்றாவது மகனான விஞ்வலாவைப் பார்த்து, "மகனே நீ எங்கு இரை தேடப் போகிறாய்? நீ பார்த்த அதிசயம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டது. மூன்றாவது மகன் : ஆம் தந்தையே, நான் இரை தேடுவதற்காகச் சுமேரு மலையில் அனந்த கானகம் என்ற ஒரு வனம் உள்ளது, அப்பக்கம் தினமும் செல்கிறேன். மிக அற்புதமான இடமாகிய அதில் இயற்கை எழில் பூத்துக் குலுங்குகிறது. ஒரு அற்புதமான குளமும் இருக்கிறது. அந்தக் குளத்தில் பூக்கள், அன்னப்பறவைகள் ஆகியவை நிறைந் துள்ளன. கந்தர்வர்கள், வித்தியாதரர்கள், ஏனைய தேவர்கள் ஆகிய பலரும் தினமும் அங்கு வருகிறார்கள். பொன் மயமான தேவலோகத்து விமானங்களும் அங்கு வருகின்றன. குளத்தின் பக்கத்தில் ஒரு மரத்தில் அமர்ந்து குளத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று மிக ஒளி பொருந்திய விமானம் ஒன்றில் ஒரு அழகிய இளைஞனும், ஒரு பெண்ணும் வந்து இறங்கினார்கள். ஒளி படைத்த தேகமுடைய அவ் விருவரும் அக்குளத்தில் நீராடி மிக அற்புதமாக உடைகளை அணிந்து கொண்டனர். கையில் ஆளுக்கொரு பெரிய கத்தியை ஏந்திக் கொண்டனர். இந்த அமைதியான சூழ்நிலையில் கத்தி