பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 65 வர்களுக்கு தானம் கொடுப்பது மிக நல்லது என்றார். அரசன் குருவைப் பார்த்து, அவ்வாறு செய்வதால் எனக்கு என்ன பயன் கிட்டும்? என்று கேட்டான். குரு, உனக்குப் பெரும் புண்ணியம் கிடைக்கும். அப் புண்ணியத்தின் உதவியால் நீ சொர்க்கலோகம் செல்லலாம் என்றார். அரசன் அவரைப் பார்த்து, "நான் சொர்க்கலோகம் சென்றால் நிலையாக அங்கேயே இருந்துவிட முடியுமா? என்று கேட்டான். குரு, 'அது முடியாது. உன் புண்ணியம் தீர்ந்தவுடன் மறுபடியும் உலகில் பிறந்துதான் ஆகவேண்டும் என்று கூறினார். அதைக் கேட்ட அரசன், தாற்காலிகமான பலனை அளிக்கும் இந்தப் புண்ணியம் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டான். அதன் பிறகு மன்னன் நிலையான இன்பத்தைப் பெற என்ன வழி என்பதை ஆராய்ந்து, விஷ்ணுவை தியானிப்பதுதான் நிலையான இன்பத்தைத் தரும் என்பதைக் கண்டு கொண்டான். உடனே, அரசைத் துறந்துவிட்டு அரசனும், அவன் மனைவியும் காடு சென்று விஷ்ணுவை தியானித்துக் கடுந்தவம் இயற்றினர். உரிய காலத்தில் அவர்கள் இருவரும் இந்த உடலை நீத்து 'விஷ்ணுலோகம் சென்றனர். மிக அற்புதமான அந்த உலகத்தில் வாழத் தொடங்கிய இருவருக்கும் ஒரு பெரிய பிரச்சனை உருவாயிற்று. அங்கே வாழ்ந்த மற்றவர்கள் எதையும் உண்பதுமில்லை; தண்ணிர் முதலிய வற்றைப் பருகுவதுமில்லை. காரணம் அவர்கட்குப் பசி, தாகம் என்பதில்லை. ஆனால் மன்னனையும், அவன் மனைவியையும் பசியும், தாகமும் வாட்டிற்று. செய்வதறியாது திகைத்த அவர்கள் இறுதியாக வாமதேவன் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்த பர்ணசாலையைக் கண்டு (மன்னனும், அவன் மனைவியும்) தம் பிரச்சனையை அவரிடம் கூறினர். அவர், 'நீ கடுந்தவம் இயற்றியது உண்மைதான். அதனால் விஷ்ணுலோகம் வந்தாய். ஆனால் நீ உயிருடன் இருக்கும் ш.ц.-5 - - -