பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பதினெண் புராணங்கள் போது, பசியோடும் தாகத்தோடும் வந்த ஏழைகளின் பசியையோ, தாகத்தையோ போக்க மறுத்துவிட்டாய். அவ்வாறு பிற உயிர்கட்கு இவற்றைப் போக்கி இருந்தால் அந்தப் பசியும், தாகமும் இப்போது உனக்கிராது என்று கூறினார். இதை அறிந்து கொண்ட அரசன் அவரைப் பார்த்து, இப்பொழுது இது தீர என்ன வழி? என்று கேட்டான். வழி ஒன்று மில்லை. காட்டில் நீங்கள் இருவரும் விட்டு வந்த சடலங்கள் இப்பொழுது சுமேருவில் உள்ள குளக்கரையில் உள்ளன. அங்கு சென்று உங்கள் உடலையே வெட்டி உண்டு உங்கள் பசியைத் தணித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். வேறு வழியில்லை என்பதை அறிந்த அரசன் இதற்கு எப்பொழுது விமோசனம்? என்று கேட்டான். முனிவர், என்றாவது ஒரு நாள் யாரோ ஒருவர் விஷ்ணுவின் மந்திரங்களை உங்கள் காதுகளில் படும்படியாகப் பாடினால், அதைக் கேட்டவுடன் உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூறினார். அந்த மன்னனும் மனைவியும், விஷ்ணுலோகத்தில் இருந்து தினமும் வந்து தங்கள் உடல்களைத் தாங்களே வெட்டித் தின்பதைத் தான் நீ பார்த்தாய். எங்களுக்குக் கொஞ்சம் தா!' என்று கேட்கும் இரண்டு பேய்களும் பசி, தாகம் என்பவையாகும். கைகொட்டிச் சிரிக்கும் இரண்டு பெண்களும் பிரக்ஞை, சிரத்தை என்பவையாகும். மகனே! நாளைக்கு அந்த மந்திரத்தை உபதேசிக்கிறேன். நீ சென்று அவர்கள் காதில் படும்படி இந்த மந்திரத்தைப் பாடி அவர்கள் துயரம் நீங்க உதவி புரிவாயாக. மறுநாள் அந்தக் குஞ்சுக்கிளி அரசன், அவன் மனைவி இருவரும் பிணத்தைத் தின்ன வரும்பொழுது அவர்கள் காதில் படும்படி அந்த மந்திரத்தைப் பாட அவர்கள் இருவரும் இக்கொடுமை யிலிருந்து மீண்டு விஷ்ணுலோகம் சென்றனர்.