பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 பதினெண் புராணங்கள் அதிசயித்து நின்றாள். இது என்ன மரம்?' என்று சிவனைக் கேட்டாள். சிவன், இது கற்பக மரம் என்ன வேண்டுமென்று கேட்கின்றாயோ அதைக் கொடுக்கும் என்று கூறியவுடன், பார்வதி அந்த மரத்தைப் பார்த்து, மிக அழகான பெண் ணொருத்தி வேண்டும் எனக் கேட்டாள். அந்தக் கணமே ஈடு இணையில்லா அழகுடன் ஒரு பெண் வந்து பார்வதியை வணங்கி, ‘என் பணி யாது?’ எனக் கேட்டாள். பார்வதி, 'இந்த வனத்திலேயே இருந்து வருவாயாக, நகுஷன் என்ற மன்னன் உன்னை வந்து மணம் செய்துகொள்வான்' என்று கூறிவிட்டு, அசோகசுந்தரி என்று அப்பெண்ணிற்குப் பெயரிட்டு மறைந்தாள். அசோகசுந்தரி அந்த வனத்தில் இருந்து வந்தாள். விப்ரசித்தி என்ற அசுரனுக்கு ஹீண்டா என்ற மகன் இருந்தான். அவன் ஒருநாள் கைலாசத்தில் உள்ள நந்தவனத் திற்குச் சென்றான். உடனே அசோகசுந்தரிமேல் காதல் கொண்டு தன்னை மணம் புரிந்து கொள்ளுமாறு வற்புறுத்தி னான். அசோகசுந்தரி மறுக்கவே பல மந்திர தந்திரங்கள் தெரிந்த ஹீண்டா ஒரு பெண் வடிவு எடுத்து, அவளைச் சந்தித்தான். அப் பெண் வடிவை யார் என்று அசோகசுந்தரி கேட்க, அப் பெண் தான் ஒரு விதவை என்றும், தன் ஆசிரமத்தில் தவம் புரிவதாகவும் கூறிவிட்டு, அசோக சுந்தரியைத் தன் ஆசிரமத்திற்கு அழைத்தாள். அந்த வார்த்தை களை நம்பிக் கொண்டு அப் புதிய பெண்ணுடன் சென்ற அசோகசுந்தரிக்குப் பெரிய இடையூறு வந்தது. தன் இடம் போனதும், ஹீண்டா தன் பழைய வடிவை எடுத்துக்கொண்டு அசோகசுந்தரியை பலாத்காரம் செய்ய முயன்றான். தன் கணவன் நகுஷன் வந்து கொல்வான் என்று கூறித் தப்பித்து வந்தாள். . -