பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமழ் குரல் துழாய்

LT4ು புலவன் காப்பியாற்றுக் காப்பியனர்

செந்தமிழ் இலக்கியம் சிறக்க, செஞ்சுவைச் செய்யுட்கள் பல ஆக்கியும், அவ்விலக்கிய மரபு இனிது நடைபெற இலக்கணம் அமைத்தும், மொழி வளர்த்த முதுபெரும் தமிழ்க் குடிகளுள். காப்பியக்குடியும் ஒன்று. ஒல்காப் பெரும்புகழ் வாய்ந்த தொல்காப்பியப் பேரிலக்கண நூலை ஆக்கி அருளிய ஆசிரியப் பெருந்தகையார் பிறந்த பெருமையுடையது அக் காப்பியக்குடி, எட்டுத்தொகை வரிசையுள், முதற்கண் வைத்து மதிக்கத்தக்க மாண்புமிகு நற்றிணைக்கண் இடம் பெறும் இனிமைமிகு செய்யுட்களைப் பாடிய புலவர் பெரு மக்களுள், ஒருவராய காப்பியஞ்சேந்தனுரைப் பெற்றளித்த பெருமையுடையதும், அக்காப்பியக்குடியே. காப்பியக்குடி, சேர, சோழ, பாண்டியர் குடிகளைப் போலவே, பழமையும் பெருமையும் வாய்ந்த வான் சிறப்புடையது. காப்பியக்குடியினர் அந்தணர் குலத்தவராவர் என்று, சிலர் கூறுகின்றனர்; ஆனால் அவ்வாறு கொள்வதற்காம் அகச்சான்று இது என எதையும் அன்னர் காட்டுவாரல்லர். நிற்க; காப்பியக்குடி, ஒரு குடிப்பெயர் அன்று: அஃது ஒர் ஊரின் பெயர். அது, சோழர்களின் பழம்பெரும் கோநகரும், கடல் வாணிகப் பேருரும் ஆகிய புகார் நகரத்திற்கு, ஏறக்குறைய ஒரு காவத தூரத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்றும், தஞ்சை மாவட்டம் மாயவரம் வட்டத்தில், இக்காலை இடம் பெற்றிருக் கும் காப்பியக்குடி என்ற சிற்றுாரையே, அப்பழம் பதியாகக் கொள்ளினும் இழுக்கில்லை என்றும், தென்னர்க்காடு