பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்க்குத், திருமாலை வழிபடும் புலவரின் சமயப்பற்று தெற்றென விளங்கா நிற்கும். திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலில், உலகமே திரண்டு வந்தாற்போல் வந்து குழுமியிருக்கும் அடியார்கள், தலைமேல் கூப்பிய கையினராய் அப்பெருமான் புகழ்பாடும் பாட்டொலியையும், அப்பெருமானுக்கு நிகழ்த்தும் ஆறுகாலபூசனைதோறும் அடித்து எழுப்பும் மணிகளின் ஓசையையும் காதுகுளிரக் கேட்டும், உண்ணுநோன்பினராய அவன் அடியார்கள், விடியற்போதில் புனலாடி வந்து வழிபடும் காட்சியையும், திருமகள் வீற்றிருக்கும் விரிந்த மார்பில் மணங்கமழும் துளசிமாலை அணிந்து, கையில், ஒளிகாலும் ஆழி முதலாம் ஐம்படை ஏந்தி நிற்கும், திருமாலின் திருவுருவக் காட்சியையும் கண்டும் கவி பாடிக் களித்துள்ளார் புலவர் காப்பியாற்றுக் காப்பியர்ை.

'மண்கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக் கைசுமந்து அலறும் பூசல், மாதிரத்து நால்வேறு நனந்தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப, தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென, உண்ணுப் பைஞ்ஞீலம் பனித்துறை மண்ணி, வண்டுது பொலிதார்த் திருளுெமர் அகலத்துக், கண்பொரு திகிரிக், கமழ் குரல் துழாய், அலங்கற்செல்வன் சேவடி பரவி நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதி பெயர'.

-பதிற்றுப்பத்து 31 : 2-10 காப்பியாற்றுக் காப்பியளுர், களங்காய்க் கண்ணி, நார்முடிச் சேரலின் பண்புநலன் பலவும் அறிந்து பாராட்டியுள்ளார். பாழிக்கு உ ரி யே னு ம், பெண் கொலை புரிந்தோனும், ஆகிய, நன்னன் என்பானை வென்று, அவன் பண்டு கவர்ந்து அரசாண்டிருந்த, தன்குலத்தவர்க்குரிய பாழி நாட்டைக், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் மீட்டுக்

3