பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுடைத்தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்

வடபேரிமயப் பெருவரையில் விற்பொறித்த விறல்மிக்கோளுகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு, அவன் இளைய மனைவி, வேளாவிக்கோமான் பதுமன் மகள் வயிற்றில் பிறந்த மக்கள் இருவருள் ஒருவன், களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரல். ஒரு தாய்வயிற்றில் பிறந்த இவன் உடன் தோன்றல், ஆடுகோட்பாட்டுச்சேரலாதனவன். களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்ற பெயர், இவன் இயற். பெயரன்று. களங்காயால் கண்ணியும், நாரால் முடியும் ஆக்கி அணிந்து கொண்டமையால் வந்த காரணப் பெயராம். 'முடி சூடுகின்ற காலத்து யாதோ ஒரு காரணத்தால் முடித்தற்குத் தக்க கண்ணியும் முடியும் உதவாமையின், களங்காயால் கண்ணியும், நாரால் முடியும் செய்து கொள்ளப்பட்டன” என, அவன் அவை சூடியதற்குக் காரணம் கூறுகிருள் பதிற்றுப்பத்தின் பழைய உரையாசிரியர். இவன் ஆட்சிப் பொறுப்பேற்கின்ற காலத்தில், இவன் பகைவர் சிலர், நன்னன் என்பான் துணையோடு, இவனுக்குரிய சேரநாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருந்தாராக, 'இழந்த அந்நாட்டையும் வென்று, என் ஆட்சிக்குரிய அனைத்து நாட்டையும் ஆளும் அந்நாள்வரை, எம் இனத்தார் வழிவழி அணிந்து கொள்ளும் கண்ணியும் முடியும் புனையேன்” எனச் சூள்உரைத்து, அவற்றிற்கு ஈடாகக் களங்காய்க் கண்ணியும், நார்முடியும் புனைந்து கொண்டமையால், இவனுக்கு இப்பெயர் வந்ததாதல் வேண்டும் என, இக்கால வரலாற்று நூல் வல்லார் சிலர் கூறுகின்றனர். இப்பெரு வேந்தனுக்குப் பெயர் சூட்டவல்ல பெருமை வாய்ந்த அவ்

Ö