பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரண்டனுள், நார்முடியின் அமைப்பின் அழகை, இவனைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனுர், தம் பாட்டொன்றில் விளங்கக் கூறியுள்ளார். அது, பாடிய புலவன் தலைப்பில் முன்னரே விளக்கப்பட்டுளது.

களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலாதன், நனி இளையய்ை இருந்த காலத்தில், சேரர் பேராசிற்குரிய பூழி நாட்டை, பாழிக்குரிய நன்னன் என்பான் கவர்ந்து கொண்டான். நார் முடிச்சேரல், சேரர் அரியணை ஏறியதும் முதற்கடமையாக நன்னன் மீது படையெடுத்துச் சென்று, கடம்பின் பெருவாயில், வாகைப் பெருந்துறை முதலாம் இடங்களில் அவனை வளைத்துப் போரிட்டு, அவன் காவல் மரமாம் வாகை மரத்தையும் வெட்டி அழித்து, அவனையும் வெற்றி கொண்டு, பழம்பெரும் உரிமை வாய்ந்த பூழிநாட்டைப் பெற்று மீண்டான். குடிப்புகழ்காத்த, இப்பெருஞ்செயலைக், காப்பியாற்றுக்காப்பியனர், கல்லாடனர் ஆகிய இருபெரும் புலவர்கள் பாராட்டிப் பாடியுள்ளனர்.

'நன்னன், சுடர்வீவாகைக் கடிமுதல் தடிந்த தார்மிகு மைந்தின் நார் முடிச் சேரல்'

-பதிற்றுப் பத்து 40: 15-16 'இரும்பொன் வாகைப் பெருந்துறைப் செருவில் பொலம்பூண் நன்னன் பொருது களத்து ஒழிய வலம்படுகொற்றம் தத்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்த நாடுதந்தன்ன வளம்.'

- -அகநானூறு: 199

ஒளவைக்கு அருநெல்லிக்கனி அளித்த அதியமான் நெடுமான் அஞ்சியின் குலத்து வந்து, நெடுமிடல் எனும்