பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழுநிலா நாளில் மட்டுமேயல்லாமல், அது மறைந்தொழுகும் நாட்களிலும், மக்கள், தங்கள் தங்கள் மனப்புறங்களில் வழங்குவதைப்போலவே, அச்சம்அற்று வந்து வழிபாடாற்றிச் செல்வர்' என்று கூறக் கேட்ட காப்பியனர், களங்காய்க். கண்ணியானின் காவற் சி ற ப் பி ன் கவின் அறிந்து களிகூர்ந்தார்.

களிக்கும் உளத்தோடு சென்று கொண்டிருந்த புலவர், வானளாவ உயர்ந்து விளங்கும் அந்நாட்டு மலைகள், வடக்கு தெற்காக நீண்டுகிடந்து, மேலைக்கடலில் நீர்குடித்துக் கீழ்த் திசை நாடு நோக்கிச் செல்லும் கார்முகில், கீழ்த்திசைக் கடலில் படிந்து, கருவுற்று எழுந்து, மேலைத்திசைநோக்கி விரையும் மழைமுகில் ஆகிய இருதிசைமேகங்களையும் தடுத்து, அவ்விரண்டிலுைம் பயன்பெறுதல் கண்டு வியந்தவாறே அம்மலையிடை வ ழி க ளே க் கடந்து, மாநகர் அடைந்து, மன்னவன் பெருங்கோயில் புகுந்து, அரசவை அணுகி, அரியணைக்கண், அரசமாதேவியோடு அ ம ர் ந் தி ரு க்கு ம் நார்முடிச்சேரலின் நாளோலக்கச் சிறப்பினைக் கண்ணுற்ருர். மன்னன் மாண்புணர்ந்து மகிழும் மனத்தினராய் அம்மன்றம் புகுந்த புலவர் கண்களை, விம்மி உயர்ந்து, பொன் அணிபல பூண்டு பொலிவு பெற்று விளங்கும் அவன் வியன்மார்பே முதற்கண் கவர்ந்தது. தன்ஆட்சிக்கீழ்வாழும் மக்களுக்குப் பசியாலும் பிணியாலும் பகையாலும் வந்துற்ற கேடுகளை யெல்லாம் கெடுத்துவிட்டு, அவர்கள், கவலையறியா மனத் தினராகி மாலோன் முதலாம் கடவுளர் உறையும் கோயில் தொறும் சென்று, வழிபடுதல் போலும் உயர்ந்த ஒழுக்க முடையவராய் வாழும் விழுமிய வாழ்க்கைநிலையை வகுத்துத் தந்தும், சேரநாட்டோடு பகை கொண்டிருந்த ஒருசிலரையும் வென்று, அவர் முரசு முதலாம் அரச விருதுகளைக் கவர்ந்து கொண்டு அவர்களைப் பணிகொண்டும், தாளா முயற்சி மேற்

13