பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முரசு, வெற்றிமிகு போர்குறித்து முழங்குமேயல்லது, வையத்தார் கேட்டு நடுங்குக என வறிதே முழங்குவது இல்லை. அதல்ை, போர் முரசின் ஒலி கேட்டதும், காலில் கழல் புனைந்து, தலையில் பனைமாலை அணிந்து, கையில் கூர் வேல் ஏந்தி களம் புகுந்து விடும் சேரநாட்டின் பெரும் படைக்குத் தலைமை தாங்கும் தனிச்சிறப்பு வாய்ந்த அப் ப ைட த் த ல வ ன், அப்படைவன்மை கண்டு அஞ்சி அடிபணியக் கருதாது, எதிர்த்து நிற்பவர் மீது பாய்ந்து அழிப்பனேயல்லது, போரில் தோற்றுப் புறமுதுகு காட்டி ஒடும் ப ைட வ ல ம் இழந்தார்மாட்டு படைதொடாப் பேராண்மையுடையவன், அறவழி போர்புரியும் ஆண்மை யாளன் என்பதும், சேரநாட்டு அரசோடு நட்புறவு கொண்ட நாட்டவர்க்கு, நல்ல துணையாய் நின்று அவரைக் காக்கவும், மாருக அச்சேரநாட்டவரோடு பகைகொண்டு வாழ்வார்க்கு, அன்னர் எத்துணைப் படைவலம் பெற்றவராயினும், அவர்க்குத் துணைபுரியும் அரண் எத்துணைத் திண்ணியதேயாயினும், பெருங்கேடு புரியவல்லதுமாகிய நாற்படையே அவன் கீழ்ப் பணிபுரிகிறது என்பதும் அறிந்தார்; அளவிலா மகிழ்ச்சி யில் ஆழ்ந்தார்.

ஆக, நல்லுடல், நிறைந்த புகழ், குறைவிலாப் பெரு வளம், மனையற மாண்புமிக்க மனைவி, பெரும்படை, அறப் போர் காணும் பெரும்படைத் தலைவன், என்ற அனைத்து நிலை யாலும் சிறந்து விளங்கும் சேரலாதன் மாண்பு கண்டு மருண்டு நின்றார் புலவர்; அவர் அகத்தே மலர்ந்ததுஓர் அழகியபாடல். துளசி மாலையின், தனித்தனி இதழ்களாகத் தொடுக்கப் பெருமல், கொத்துக் கொத்தாகத் தொடுக்கப் பெற்றிருக்கும் சிறப்பையும், மலராக இல்லாமல் சின்னஞ்சிறு இலைகளாகவே இருக்கவும், மணம் கமழும் மாண்பையும் ஒருங்கே புலப்படுத்தும் கமழ் குரல் துழாய் என்ற தொடரின் நயம்

16