பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசும்பு வழங்கு மகளிர் உள்ளும் சிறந்த செம்மீன் அனையள் நின் தொன்நகர்ச்செல்வி: நிலன் அதிர்வு இரங்கலவாகி வலன் ஏர்பு 30 வியன்பனை முழங்கும் வேல்மூசு அழுவத்து

அடங்கிய புடையல் பொலங்கழல், நோன்தாள், ஒடுங்காத் தெவ்வர் ஊக்கறக் கடைஇப் புறக்கொடை எறியார் நின் மறப்படை கொள்ளுநர். நகைவர்க்கு அரணம்ஆகிப், பகைவர்க்குச் 35 சூர்நிகழ்ந்தற்று நின்தான்;

போர்மிகு குருசில்! மாண்டனை பலவே ,

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்துாக்கு பெயர் ! கமழ்குரல் துழாய்

மாந்தர் அலறும் பூசல் ஒ லி ப் ப, மணி எறியுநர் கல்லென, பைஞ்ஞலம், மண்ணி, சேவடிபரவி, உவகையர் பதிபெயர, மதியம், இருள் அகல நிலாவிரிபு இயலுற்ருங்கு, திருத்தி, கொண்டி இறுத்த நின் மார்பு, வரை அற்று தோள் எபூஉ நிவந்தன்ன. நீ வண்டன் அனையை; செல்வி செம்மீன் அனையள்; நின் மறப்படை கொள்ளுநர் புறக்கொடை எறியார். தான்ை சூர் நிகழ்ந்தற்று. நீ பல மாண்டனை என வினை முடிவு கொள்க.

குன்று தலைமணந்து - மலைகள் பல தொடர்ந்து. குயூஉக் கடல் உடுத்த = அலைகள் ஒன்று திரண்டு ஓவென முழங்கும் கடலை ஆடைபோல் சூழக்கொண்ட மண்கெழு ஞாலத்து = மண்ணுல் ஆன இந்நிலவுலகத்தைச் சேர்ந்த மாந்தர் = மக்கள். ஒராங்கு கை சுமந்து அலறும் பூசல் - ஒன்றுகூடி

18