பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்மீன் வடிவினளாகிய அருந்ததி அனையள். நின் மறப்படை கொள்ளுநர் = மறம் மிக்க உன் நாற்படைக்குத்தலைமை தாங்கும் படைத்தலைவர். வியன் பனை = பெருமை வாய்ந்த போர் முரசு. நிலன் அதிர்பு இரங்கலவாகி = உலகத்தவர் கேட்டு வாளா நடுங்குமாறு வந்தே முழங்காது. வலன் ஏர்பு முழங்கும் . வெற்றி குறித்து முழங்கா நிற்கும். வேல்மூசு அழுவத்து=வேற்படை திரண்ட போர்க்களத்தில். அடங்கிய புடையல்=கட்டிய போர்ப்பூமாலையும். பொலங்கழல் = பொன்னல் பண்ணிய வீரக்கழல்புனைந்த நோன்தாள்= வலிய கால்களும் உடைய. ஒடுங்காத்தெவ்வர் = நின் ஆற்றல் கண்டு அஞ்சி அடங்காத பகைவர்களின். ஊக்கு அறக் கடைஇ = ஊக்கம் கெட்டழியுமாறு படைக்கலங்களே ஏவி. புறக்கொடை எ றி யார்=தோற்ருேடும் பகைவர் முதுகில் படைதொடுத்து அறியார். நின் தான்ே - உன் நாற்படை. நகைவர்க்கு அரணம் ஆகி=அன்பு காட்டும் நண்பர்க்கு அரண் அளிப்பதாகி. பகைவர்க்குச் சூர் நிகழ்ந்தற்று = பகைவர்க்கு அடாது .ெ ச ய் த ைர ஒறுத்து அழிக்கும் அணங்குபோலாம். போர்மிகு குருசில் நீ = போர்க்களத்தே .ெ வ ற் றி ய ர ல் வீறுகொள்ளும் விழுமியோணுகிய நீ, பல மாண்டனே=இவ்வாறு பலவகையாலும் மாட்சி பெற்றுள்ளாய்.

சேரநாடு அல்லது பிற சிறிய பெரிய நாடுகளுக்கு உரியராகிய அரசர் கூட்டம், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேர வேந்தல்ை அ ல் ல து , தம் பெரும்படையாற்றல்களால், தம் நாட்டிற்கு வர இருக்கும், வந்திருக்கும் கேடுகளைப் போக்குவது இயலாது என்ற உணர்வு வரப்பெற்று, சேரர் தலைநகர்வந்து, சேரவேந்தனப் பணிந்து, அவன் துணை பெற்றுக்கொண்ட மனநிறைவோடு, தத்தம் நாடடைந்து இனிது வாழ்வர். சேரவேந்தனின் இச்சிறப்பை எடுத்துக்

21