பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருந்திலர் என்பாரின் போர் வெறிகண்டு பொருது, அவரை அரிமணவாயில் உறத்தூரில் வளைத்துப் போரிட்டு வாழ்விழக்கப் பண்ணிய வீறுடைமையால், பரணர் பாராட்டை யும் பெற்ற பெருவலி படைத்தவன் அவ் அஞ்சி. அத்தகு ஆற்றல் உடைமையோடு அவன்பால், வளம் மிக்க நாடு ஒன்றும் இருந்தது. நீண்ட பெரிய கால்களையுடைய நாரைகள் நீருட்புகுந்து தாம் விரும்பும் இரையாகிய மீன்களைத் தேடுமளவு நீர்வளம் மிக்க நஞ்செய்களில், மூங்கில் தண்டு களோ என மருளத்தக்க தாள்களைக் கொண்ட நெற்பயிர் ஈன்றகதிர்களும், தம்நிறை பொறுக்கமாட்டாது தலைமடங்கித் தரையில் சாய்ந்து கிடக்குமாம். அத்துணைப் பெருவளத்தை ஆண்டுதோறும் தப்பாது அளிக்கவல்லது அவன் நாடு. இவ்வாறு வளமும் வன்மையும் ஒருசேர வாய்க்கவே. அந்நெடு மிடல் அஞ்சியும், அவன் நாட்டவரும், பழிமிகும் அழிவுத் தொழில் புரிவதில் ஆர்வமுடையவராகி விட்டனர். மக்கள் என மதிக்கத்தக்க மாண்பு, அவர்பால் நில்லாது அகன்று விட்டது. எங்கும் எப்போதும் பழிதரு செயல்களே புரிவது, எவரைக் காணினும் வசை மொழியே வழங்குவது என்ற வழக்குடையராகி விட்டார்கள்.

நெடுமிடல் அஞ்சியின் இந்நிலைக்கண்டு, நார்முடிச்சேரல் கடுஞ்சினம் கொண்டான். அவனை வென்று அடக்க வேண்டுவது இன்றியமையாதது என்பதை உணர்ந்தான்். அவ்வுணர்வு பிறந்த அன்றே, அவன் நாற்படை அந்நாட்டுள் சென்று பாசறை அமைத்தது. நெடுமிடல் அஞ்சியின் நாடு புகுந்து, அந்நாடடின் நிலையினை நேரில் கண்ணுற்றதும், நார்முடிச்சேரல், நெடுமிடலைக் கேடேபுரியும் கொடியோளுக்கியது, அவன் நாட்டின் நிலநீர்வளங்களே; அவ்வளம் வறண்டுவிட்டால், அவன் ஆற்றவும் நல்லோனகிவிடுவான் என்பதை உணர்ந்தான்். உடனே, அவ்வளங்களைப் பாழ்.

26