பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்ண வேண்டிய பெ ரு ம் பணி ைய த் தன் களிற்றுப் படையாளர் பால் ஒப்படைத்தான்். உடனே, நெல் விளைந்து கிடக்கும் நஞ்செய்களிலும், உண்ணுநீராகவும், மண்ணு நீராகவும் உறுபயன் அளிக்கும் தண்ணீர்த்துறைகளிலும் களங்காய்க்கண்ணியானின் க ளி று க ள் புகுந்துவிட்டன. அவ்வளவே அத்துணைவளமும் அரைநாழிகைப் போழ்தில் அறவே அழிந்து தரைமட்டமாயின.

நாட்டின் அழிவுகண்டு வெகுண்ட அந்நாட்டவர், களங். காய்க்கண்ணியான் மீது வசைமாரிப் பொழிவாராயினர். அவ் வளவையும் கேட்டான் அவன். ஆனால், அதற்காக அவர்பால் சினம் கொண்டிலன். நினைத்தால் ஒரே நாழிகையில், இருந்த இடம் தெரியாதபடி உருக்குலைத்துவிடவல்ல பெரும் படையோடு வந்திருந்தும், வசைபொழிவாரின் நிலைக்கு வருந்துவதல்லது சினவாதிருக்கும் சேரலாதன் கிறப்பினைப் புலவர் கண்டார். சினம், அரசரோடு உடன் பிறந்தது என்ப. அங்ங்னமாகவும், படைவலியோடு வந்திருக்கும் தன்னைத், தன்காதுகேட்க வசையொழியக் கண்டும், வெகுளா திருக்கின்றனன் என்றால், புலவரால் அவன் பெருமைகண்டு வியக்காதிருக்க ஒண்னுமோ? காவலர்பால் காணக்கூடாத அப்புதுமையை அக்காவலன்பால் காணவே, காப்பியாற்றுக் காப்பியனுர், தாம்கொண்ட வியப்பு மேலிட்டால், வேந்தே! உம்பால் பொருந்தியிருக்கும் இ ப் ெய ரு ந ல ம் கண்டு மருண்டே போனேன் வாழ்க அம் மாண்பு' என வியந்து நோக்கி வாழ்த்தி நின்றார், -

அவர் வழங்கிய அவ்வாழ்த்துறையுள், நெல்லின் தண்டிற்குத், தாள்என்பதே பெயராகவும், அதனை வழங்காது, அளவுமீறிப் பருத்திருக்கும் அதன் பருமை கண்டு வியந்து, அதைக் கழை என்றே பெயரிட்டழைத்துள்ள பெருமைகண்டு

27