பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வரம்பில் வெள்ளம்

காப்பியாற்றுக் காப்பியனர், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் அரசவைக்கண் வீற்றிருந்தகாலை, சோளுட்டு அரியணையில் வீற்றிருந்தோனும், பாண்டிநாட்டு அரியணையில் வீற்றிருந்தோனும் ஆகிய இருபெருவேந்தரும் களங்காய்க் கண்ணியானின் புகழ்மிகு பெருவாழ்வு கண்டு பொருராகி, அவனைப் போரிட்டழிக்கும் கருத்தினராய்த் தம் படைகளைப் பெருக்கி வருகின்றனர் என்ற செய்தியைச் சேரநாட்டு ஒற்றர் வந்து உரைத்தனர். அதுகேட்ட களங்காய்க்கண்ணி யான், 'அன்னர் கருத்து அதுவாயின், அவர்படை போர் மேற்கொண்டு நம்நாடு புகும் முன்பே, நம்படை சென்று புகுக அவர் நாட்டுள்’ என்று ஆணையிட்டான்.

அவ்வளவே, பனைபோல் பருத்த கால்களையுடைய களிறுகள், இருபுறமும் தொங்கும் மணிகள் விரைந்து பேரொலி எழுப்ப, பெருமித நடைபோட்டுப் புறப்பட்டு விட்டன. அவ்வாறு புறப்பட்ட அப்படை பகைவர் நாட்டில் அடிவைத்ததும், அந்நாட்டு நன்செய் புன்செய் நிலங்களுள் புகுந்து விளைபொருள்களைப் பாழ்பண்ணின. உண்ணுநீர் நிலைகளிலும், தண்ணீர்த்துறைகளிலும் புகுந்து, காலிட்டுக் கலக்கிச் சேருக்கிச் சீரழித்தன. அம்மட்டோ ! இவ்வாறு அழிவுத்தொழில் புரிந்தவாறே விரைந்துபோகும் அக்களிறுகளைப், பகையரசர்கள், தம் உயிரினும் சிறந்தனவாக, தம் பேரும் புகழும் புலப்படுத்தும் நினைவுச் சின்னங்களாகக் கொண்டு பேணிப்புரந்துவரும் காவல் மரங்களில் கட்டினர்கள் சேரநாட்டு வீரர்கள். காவல் மரங்களில் கட்டுண்ட யானைகள், அவற்றைச் சிறுகச் சிறுகச் சீரழிக்கத் தலைப்பட்டன, அது நிற்க.

31