பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களிற்றுப்படையை முன்னேபோக்கிய களங்காய்க் கண்ணியான், விற்பொறித்த கொடி பறக்கும் நெடிய தேர் மீது அமர்ந்து, 'இப்படை தங்கற்காம் இடமும் இராதே’’, என்று கண்டவர் மருண்டு நிற்கத்தக்கதாய், 'கரையற்றது கடல் என்று கூறுவர் என்ருலும், கடலுக்குக் கரை உண்டு; ஆனால் இப்படைக்கு ஒரெல்லை இராதுபோலு மாதலின், இஃது, ஒரு வரம்பு கூறலாகா வெள்ளமாம்” என்று வியந்து கூறி வாய் பிளந்து நோக்கத்தக்க பெருமையுடையதான் பெரும்படைக்குத் தலைமை தாங்கிப் புறப்பட்டு விட்டான். நார்முடிச் சேரலின் தலைமைக் கீழ்ப்புறப்பட்ட அந்நாற்படை, தாம் புகுந்த நாட்டு விளைபுலங்களிலும், வாழும் ஊர்களிலும் எரியூட்டியவாறே சென்று கொண்டிருந்தது.

சேரநாட்டின் பெரும்படை, கடல்போல் திரண்டு சென்று கொண்டிருப்பதைக்கண்டு, இப்படையை எதிர்த்து நிற்கவல்ல ஆற்றல், சோழ பாண்டியர்க்குச் சிறிதும் இராதே. நார் முடிச்சேரலின் நாற்படைப் பெருமையறியாது, அவனைப் பகைத்துக் கொண்டு தங்கள் நாட்டழிவைத் தாமே தேடிக் கொண்ட அப்பேரரசர்களின் பேதைமையை என்னென்பது என்றுகூறிக் களங்காய்க்கண்ணியானைப் பாராட்டுவதும், பகைநாட்டு அழிவு நினைந்து நெஞ்சுருகுவதுமாக உடன் சென்றுகொண்டிருத்தார் புலவர் காப்பியாற்றுக் காப்பியர்ை.

புலவரைப் பின்தொடர்ந்து சிலர் சென்று கொண்டிருந்தனர். அவர்கள், அப்பகைநாட்ட்ைச் சேர்ந்தவர்கள். பகை யரசர்களின் படைநிலைகளை அரண்பெருமைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள் அதல்ை 'பெரியீர்! இதோ செல்லும் சேரர்படை, தாங்கள் கூறுவது போல், உண்மையில், அளந்துகாணமாட்டா ஒரு பெரும்படையேயாம் என்ருலும், இப்படையோ, போரிடப்போவது பகைவர் நாட்டில், பகைவர்

32