பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை, எத்திசையில் வேண்டுமாயினும் வந்து தாக்கலாம் வெட்டவெளியில் இருக்கவேண்டிய, இடர்மிகுந்த பகைவர் நாட்டில். ஆனல் இப்படையெடுப்பை எதிர்நோக்கி நிற்கும் பகைவர்களோ, உயர்ந்த மதிலும், உட்புகலாகாக் காவற். காடும், கராமும் முதலையும் களித்து உலாவும் கிடங்கும், அம்புப்பொறி முதலாம் அரியபொறிப்படை அமைப்பும் கொண்ட அரணகத்தே வாழ்கின்றன. இவர்க்கோ அத்தகைய அரண் எதுவும் இல்லை. இங்ங்னமாக, இவரால், அவரை வெற்றிகோடல் இயலுமோ அவரை அழிப்பதற்குப் பதிலாக, அவரால் அழிவுண்டன்ருே மீள வேண்டியவராவர். இவர்தம் இறுதிநிலை அதுவாகப் போகவும், இவர்தம் தொடக்க நிலைச்செயல் கண்டு சிந்தை மகிழ்வது சிறந் - தோர்க்கு அழகாகாதே’ என்று கூறினர்.

அது கேட்டார் புலவர். அவர் உள்ளம் துணுக்குற்றது. "அவர் கூறுவனவும் உண்மையாமோ? அவர்கள் இந்நாட்டவர், ஆதலால், உள்ள நிலை உணர்ந்து கூறும் அவர் கூற்றில் உண்மை இருக்கவும் கூடும். அஃது அறியாது வந்து விட்ட நம்வேந்தன் வாழ்விழந்து போய்விடுவளுே!’ என்ற அச்சம் அலைக்கழிக்க, அறிவு மயங்கிவிட்டது புலவர்க்கு. தம்மை மறந்தநிலையில் தளர்நடையிட்டு வந்துகொண்டிருந்த புலவர், சென்று கொண்டிருந்த சேரநாட்டுப் படை, திடுமென ஓரிடத்தே பாடிகொளக்கண்டு கனவுநிலை கழித்து, கண்விழித்து நடப்பதை நோக்கினர்.

"பகைவர் படை வகுத்து நிற்கும் போர்க்களம் நோக்கிப் பாய்ந்து சென்று கொண்டிருந்த படை, திடுமென நின்று. விட்டது ஏனே? சற்று முன் யாம் அறிந்த செய்தியைப், படை இப்பொழுதுதான்் அறிந்து கொண்டதோ? அதனல் அச்சம் மிகுந்து அமர் குறித்து வந்த தன் கருத்தைக் கைவிட்டுப்

-3- 33