பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்ற நிலையில், கார்காலத்து இடியொலிபோல் எழுந்த முரசொலி கேட்டு, ஒருவாறு உணர்வு வரப்பெற்ற, புலவர் கண்களுக்குப் படையின் அணிவகுப்பு, காட்சி அளிக்கவே, இப்படையாளரைப் பீடழிக்கும் பெருவலி எப்படையாளர்க்கும் இராது என்ற எண்ணம் தலைதுாக்கவே, தலைநிமிர்ந்து நோக்கினர்.புலவர். அந்நிலையில், சோழ பாண்டிய நாடுகளின், அரண்பெருமைகளை வானளாவப் புகழ்ந்து பாராட்டிக் கொண்டு வந்த அப்பகைநாட்டான், சேரர் படையாளரின் சிறப்பினைக் கண்ணுற்றதும், அஞ்சி ஒடும் காட்சியைக் கண்டு களித்தார் காப்பியாற்றுக் காப்பியர்ை. அஞ்சி ஒடும் அவன் செயல், அவன் நாட்டு அரசர்செயலேயே நினைவூட்டுவதாகும். இவனைப்போலவே, இப்படை வகுப்பைக் காண்பாராயின், இன்றுவரை எதிர்த்து நிற்கும் பகைவேந்தர்களும், அஞ்சிப் புறங்காட்டி ஓடிவிடுவர். ஒடிவிட்டனர் என்றே கோடல் வேண்டும், என்று துணிந்தார். அத்துணிவு வரப்பெற்றதும், சற்றுமுன் பகைநாட்டுப் புதியோன் கூற்றைக்கேட்டுக், களங்காய்க் கண்ணியான் போர்த்திறத்தில் குறைகண்டு, அவனைச்சிறிது தாழ்ந்தவகை மதிப்பிட்ட புலவர், படையை அரணுக அமைந்துக்காட்டிய, அவன் பேராற்றல் அறிந்து, தம்மையும் திகைக்க வைத்த, அளந்து காணமாட்டா அவன் அறிவுத்திறம் அறிந்து வியந்தார். உடனே விரைந்தார் அவன்பால்; வானளாவப் புகழ்ந்துபாராட்டினர். அப்பாராட்டே இப்பாட்டு.

- படையைக் கடலுக்கு உவமை கூறுவதே பொதுமரபாகவும், இப்படை, கடலினும் பெரிது என்பதை உணர்த்த விரும்பிய புலவர், "அளந்து காணமாட்டா, எல்லை அற்றது இப்படை' என்று கூறு முகத்தான்், கடல் எல்லையுடையது; ஆகவே, இப்படைக்கடல், அவ்வுவர்க்கடலினும் பெரிது என்ற கருத்தைப் புலப்படுத்தினர். அக் கரு த் ைத ப்

35