பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரும் மணிகளைப் பக்கத்தில் கட்டப்பெற்ற, பணைமருள் நோன் தாள் - பணைபோன்ற, வலிய கால்களையுடைய. களிறு கடிமரத்தான்் அணைத்து = களிறுகளைப் பகையரசர்களின் காவல்மரங்களில் பிணித்து. நெடுநீர துறை கலங்க = பகைவர் நாட்டில் உள்ள ஆழம் மிக்க நீர்நிலைகளெல்லாம் கலங்கிச் சேருகுமாறு. மூழ்த்த இறுத்த வியன் தான்ையொடு = திரண்டு வந்து தங்கிய பெரிய முன்னணிப் படையோடு கூடிய புலங்கெட நெரிதரும் = தாம் சென்று தங்கும் பகைநாட்டு நிலங்கள் வளம் அற்றுப் போமாறு பரந்து சென்று தங்கும். வரம்பில் வெள்ளம் = கரையிலாக் கடல் போன்ற உன் பெரும்படை. வாள் மதிலாக = வாட்படையே மதிலாக. வேல்மிணை உயர்த்து = வேற்படையாகிய காவற் காட்டை வளர்த்து. விசைவில் உமிழ்ந்த அம்பு வைம்முள் = விரைந்து அம்பேவவல்ல விற்படை உமிழ்ந்த அம்புகளாகிய முள்வேலியினையும். செவ்வாய் எஃகம் வளைஇய அகழியின்= கூரியமுனைகளைக் கொண்ட பிறபடைகளாகிய, வளைந்த அகழியினையும். கார்இடி உருமின் உரறும் முரசின் = கார் காலத்து இடியோசைபோல் முழங்கும் முரசினையும் உடைய. கால் வழங்கு ஆர்எயில் கருதின் = காற்று ஒன்று மட்டுமே உட்புகலாம் அரிய காவல் அமைந்த அரணுக அணிவகுத்து நிற்பதைக் கருதிவிடுமாயின். போர் எதிர் வேந்தர் = போர் மேற்கொண்டு உன்மீது படைதொடுத்த பேரரசர்கள். நின்= உன்னையும், உன்படை அணியையும் கண்டு. ஒருப=அஞ்சி, உரம் அழிந்து ஒடி ஒளிந்துகொள்வர். இறும்பூது பெரிது - அக்காட்சி அளிக்கும் வியப்பு எமக்கு நனிமிகப் பெரிது.

37