பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஒண்பொறிக் கழற்கால்

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் பிறந்த சேரர்குடியோடு, வழிவழிப் பகைகொண்டிருந்த வேந்தர் பலராவர். அவர்தம் ஆண்மையும் ஆற்றலும் அளவிடற்கரியன. போர்க் களம் புகுந்தால், எதிர்ப்பவர் எவ்வளவுபேராயினும் எவ்வளவு பேராற்றல் வாய்ந்தவராயினும், அவர்கள் அனைவரையும் வென்று, வாகைசூடி வெளியேறுவதல்லது, அவர்க்குத் தோற்றுப் புறமுதுகுகாட்டி ஒடிவிடாப் பேராண்மை வாய்ந்தவர். இவ்வாறு போர்க்களம் பலகண்டு, பேரரசர் பலரை வெற்றிகொண்ட விழுப்புகழ் வாய்க்கப் பெற்ற அவர்கள், தாம்பெற்ற அவ்வெற்றிப் புகழ்களையெல்லாம், காலிற்புனையும் தம்வீரக்கழல்களில் விளங்கப் பொறித்துக் காட்டும் பெருநோக்கும் வாய்க்கப் பெற்றவராவர். இத்தகு போர்ச்சிறப்பு வாய்ந்த பெருமக்களாக வாழ்ந்தமையால், வேலைப்பாடமைந்த மிக உயர்ந்த நீண்ட ஆடைகளை, நிலம் புரள அணிந்து செம்மாந்து உலாவுவராயினர்.

சேரர்குலப் பகைவர்களின் செருக்குமிகு இவ்வாழ்வை உணர்ந்தவர், புலவர் காப்பியாற்றுக் காப்பியர்ை. ஆனல் அவர்தம் பெருவாழ்வு இப்போது அடங்கிக்கிடப்பதையும், பகைவர்களை வென்றல்லது மீளா வீறுடையவராகிய அவர்கள், சேரநாட்டு அரியணையில் களங்காய்க் கண்ணியான் அமர்ந்திருக்கக் கண்ணுற்றதும், அஞ்சி அடங்கி ஒடுங்கி உயிரோம்பிக், கிடப்பதையும் கண்ணுற்ருர். பேராண்மையும் பேராற்றலும் வாய்ந்த பெருவீரர்களையும் அஞ்சப் பண்ணும் களங்காய்க்கண்ணியானின் திறம் கண்டு வியந்த புலவர் உள்ளம் அத் தி ற ம் அவள்பால் வந்துபொருந்தியது யாங்கனம்? வெற்றிமிகு வேந்தரெல்லாம், இவன்பால் உள்ள

38