பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்கோடுகளும், தேர்களின் திகிரிகளும் களம்எங்கும் சிதறிக் காட்சிஅளித்தன. பிணம் தின்னும் பருந்துக் கூட்டம், தம்பெடைகளோடு வந்து களத்தை மொய்த்துக் கொண்டு, ஆங்கு மடிந்து வீழ்ந்து கிடக்கும் மாவீரர் உடல்களையும், கரியும் பரியும் போலும் மாவினத்தின் உடல்களையும் கொத்தித்தின்று கொக்கரிக்கலாயின. தலைவேறு மெய்வேருக வெட்டுண்டு வீழ்ந்துகிடப்பவர் அனைவருமே, மறவர் மரபில் வந்தவராதலின், தலைஇழந்து போன நிலையிலும், அம்மாவீரம்,அவர் மெய்யில் குடிகொண்டு நிற்பதால், அக்குறையுடல்கள் குதித்துக்குதித்துக் கூத்தாடிக்கொண்டிருந்தன. இக்கொடுங்காட்சிகள் ஆங் காங் கே நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்நிலையில், குருதிக்கறை படிந்த அக்களத்தையே, ஆடரங்கமாகக் கொண்டு பேய்க்கூட்டம், பெரு நடம்புரியத் தொடங்கிவிட்டது.

களத்தின் இக்கொடுங்காட்சிகளைக் கண்ணுற்ற புலவர் காப்பியாற்றுக் காப்பியனரின், உள்ளமும் உடலும் ஒருசேர நடுங்கின என்ருலும், தன்னைப் பகைப்பவர் படையினை இத் துணைப் பாழ்படுத்தும் நார்முடிச்சேரலின் போர்த் திறத்திை லும், அப்போர்த்திறங்களையெல்லாம் அறிந்து அழியாமல் காக்கும் அவன் அறிவுத் திறத்தாலுமே, புலவர்களின் அத் துணைப்பாராட்டிற்கும், அவன் உரியனுகிருன் என்ற உண்மை யினை உணர நேர்ந்தமையால், உள்ளம் மகிழ்ந்து, அவன் திறம் நினைந்து அவனை நெடிது பாராட்டினர்.

புலவரின் பாராட்டுப் பாவில், இடம், பெறும் மெய் யாடு பறந்தலை என்ற தொடர், நார்முடிச்சேரலால் உயிரிழந்த பகைவர், உயிரிழந்துபோயினும் உடல்ஆடும் உரம் வாய்க்கப்பெற்ற பெருவீரராவர்; அத்துணைப் பெரு வீரர்களையும் அழித்து ஒழிக்கவல்ல ஆற்றல் மறவன் அவன்

45