பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுந்தேர்த் திகிரி = நெடியதேர்களின் திகிரிகளும். தாய வியன் களத்து = சிதறிக் கிடக்கும் பெரிய போர்க்களத்தில். அளகுடைச் சேவற்கிளை - பெடைகளோடு கூடிய பருந்துக் கூட்டம். புகாஆர = தசையாகிய இரையை உண்ண தலே துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை = தலை துணிவுண்டு போக, எஞ்சிய மெய்யாகிய முண்டம். எழுந்து ஆடும் அப்போர்க்களத்தின் கண். அந்தி மாலை விசும்பு கண்டன்ன = அந்திப் போதின் செவ்வானத்தை கண்டது போன்ற செஞ் சுடர் கொண்ட குருதி மன்றத்து = செவ்வொளி வீசும் குருதிக்கறை படிந்த மன்றங்களில். பேய் ஆடும் = பேய்கள் கூத்தாடும். வெல்போர் = வெல்லும் போராகிய, வீயா யாணர் = அழியாத புதுமையினையுடைய. நின்வாயின் = நின்னிடத்தில், நின்பெருமை வென்றி = நின்பெரு வளமும் வீரப்புகழும். உரை சான்றன = ஆன்ருேர்கள் புகழ்ந்து பாடுமளவு, பெருகி நிறைவவாயின.

தலை வெட்டுண்டு போக, இருந்தஉடல் எழுந்து ஆடுவதை, அட்டை ஆடல் எனும்துறை என்ப. 'கணையும் வேலும் துணையுற மொய்த்தலின், சென்றஉயிரின் நின்ற யாக்கை இருநிலம் தீண்டா இருநிலை' எனப் பாராட்டுவர் தொல்காப்பியஞர். (புறத்திணை: 161. r

47