பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாள்மயங்கு கடுந்தார்

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், நாள் தோறும் , நாளோலக்கப் பேரவைக்கண் வீற்றிருந்து, தன்னைப் பாடிப் பரவும், பாணர் பொருநர் கூத்தர் போலும் இரவலர்க்கும், புலவர் பெருமக்கட்கும், பொன்னையும் பொருளையும், வாரிவாரி வழங்கும் வழக்குடையனவன். வரையறை செய்யாது, அவன் அவ்வாறு வழங்கவும், அவன் பெருங்கோயிலில் அடைபட்டிருக்கும் மாநிதிப் பெருக்கம், ஒருசிறிதும் குறைவுருது, மேலும் மேலும் பெருகும்வகையில், புதுப்புது வருவாய்கள் நாள்தோறும் வந்து கொண்டேயிருந்தன. இவ்வாறு அவன் வாரிவாரி வழங்குவதால் வற்றிப்போவதற்கு மாருக, வரை. யறையின்றிப் பெருகும் அவன் பொருட்செல்வப் பெருக்கைக் கண்டு, புலவர் காப்பியாற்றுக் காப்பியனர், ஒருபால் பெருமகிழ்ச்சி கொண்டார் என்ருலும், அந்நிகழ்ச்சி அவர்க்கு மற்றொருபால் .ெ . ரு ய வி ப் ைப ேய அளிப்பதாயிற்று. கொடுக்கக் கொடுக்கக் குறைபடாதிருப்பதே வியப்பு! நார்முடிச்சேரலின் நிதியோ, அந்த அளவோடு நில்லாது, மேலும்மேலும் பெருகுகிறதே! இவ்வரிய நிகழ்ச்சி எவ்வாறு நிகழ்கிறதோ? ஏனையோர்பால் உள்ள பொருள் வளத்திற். கில்லா இப்புதுமை, இவன் பொருட் செல்வத்திற்கு மட்டும் வந்து பொருந்தியது எவ்வாருே? என்று எண்ணி எண்ணி வியந்த புலவர், வியப்பின் மேலீட்டால், கோயிற்பண்டாரத்தைக் காத்துநிற்கும் பணி மேற்கொண்டிருப் பாரையே, அதற்காம் காரணம் யாது? எனக் கேட்டுவிட்டார்.

பண்டாரப் பொறுப்பாளர், 'புலவரேறே! நார்முடிச்சேரலாதன், நாளோலக்க அவைக்கண் இருத்து, பொருள்

48