பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கு இழிய நிலம்`இழி நிவப்பின் - பள்ளம் நோக்கிப் பாய்வாள் வேண்டி, மேட்டு நிலத்திலிருந்து புரண்டு விழும் நீர்வீழ்ச்சிபோல். நீள்நிரை பல சுமந்து = பிணங்களாகிய பெரிய பெரிய பாரங்களைச் சுமந்துகொண்டு. உருகெழு கூளியர் - அஞ்சத்தக்க உருவம் உடையவாகிய கூளிக் கூட்டம், உண்டு மகிழ்ந்து ஆட - பிணம் உண்டு களித்துக் கூத்தாடுமாறு. குருதிச் செம்புனல் ஒழுக = குருதியாகிய செந்நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஒட. செரு பல செய்குவை =போர்கள் பலப்பல புரிகுவை. ஆதலின், வீயாயாணர் நின்வயின்=அழியாத புதுப்புது வளங்களை உடைய உன்பால். மலிபெறுவயவு=நிறைந்து தோன்றும் பெருவலி. தாவாதாகும் = அழியாது நின்று நிலைபெறும், நின்வளன் வாழ்க= அத்தகையோளுகிய நின்பால் உள்ள வளனும் வழிவழிப் பெருகி வாழ்வதாக !

களங்காய்க்கண்ணியானின் பகைவர், காலவளர்ச்சிக்கு ஏற்ப களப்போரில், புதுமைகளைப் புகுத்திப் போரிடும் போர் துணுக்கம் வாய்ந்தவர். அத்தகைய பகைவர்களையும் வெற்றி கொண்டவன் எனக் கூறுமுகத்தான்் களங்காய்க் கண்ணியானும் புதுமுறை புகுத்திப் போரிட வல்லவன் என்பதை அறிவுறுத்தி விட்டார் புலவர், 'முன்பு செய்து வருகின்ற போராற்றிப் பகைவர் புதிதாகப் பகைத்துச் செய்யும் போர்' என்று கூறியுள்ளார் பழைய உரைகாரர்.

54