பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வலம்படு வென்றி

களங்காய்க்கண்ணிநார்முடிச்சேரலாதன், நாடு காவல் முறையை நன்கு அறிந்திருந்தான்்; அறிந்த அந்நெறி நின்று நல்லரசு ஒச்சிய அவன், அப்பெருமையால் மகிழ்ந்து, தன்னை வியந்து, அதல்ை தன்னை மறந்து தருக்குமிகுந்து தலைதடு மாருது, பண்பால் நிறைந்த பெரியோனுகவும் வாழ்ந்து வந்தான்். உயர்ந்த பண்பும், சிறந்த பெருமையும் உடைய உரவோரையல்லது பிறரைப் புகழ்ந்துரைத்து அறியாப் பெருமைமிகு நாவுடைய நல்லோர்கள், தன்னை நாள்தோறும் புகழ்ந்து பாடவேண்டும் என்ற வேட்கையுடையவன் அவ்வேந்தன். அதனல், அவர்கள், தன்னமதித்து மனநிறைவோடு வாழ்த்தவல்ல வகையில், வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று முனைந்தான்்.

ஒருவர்க்குப் புகழ்தரும் வழி க ள | வ ன கல்வியும், செல்வமும், வீரமும், கொடையும் எனப் பலவுளவேனும், வள்ளுவப் பெருந்தகையார், 'ஈதல் இசைபட வாழ்தல்” என ஈகையால் வரும்புகழிற்கு, ஏனையவற்ருல் வரும் புகழ் ஈடுஇணை ஆகாது எனக்கூறியிருக்கும் உண்மையை உணர்ந்திருந்தவளுதலின், ஆடியும் பாடியும் உலகமக்களுக்கு உண்மையான இன்பத்தைத் தரவல்லவராகிய பாணர்களும், பொருநர்களும், கூத்தர்களும் புலவர்களும் மகிழ்ச்சிமிகு வாழ்வினரானல்தான்், அவரால் பிறரை மகிழ்விக்க இயலும் என்ற, மக்கள் மனவியலை உணர்ந்திருந்து, அவர்கள் மனம் நிறையும் மாநிதிகளை,அவர்களுக்கு வாரிவழங்க விரும்பின்ை. அம்மன்னவன், வளத்தைப்பெருக்கும் வழிகாணுது, வாரி வழங்கிக்கொண்டே வந்தால், வளம்சுருங்க வழங்குவது அற்றுப்போகும் ஆதலின், வழங்கும் அத்தொழில் இடை

55