பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரைப்பாழ் பண்ணுவது கூடாது; அதற்கு மாருக அவர் மனம் தான்ே மாறும் வகையில் அவரை மதித்து நடாத்துதல் வேண்டும். அதை, அவர்களை அவர் நாட்டிலேயே வைத்து முடித்தல் இயலாது; அவர்களைக் கைபற்றிக் கொணர்ந்து இந்நாட்டில் வைத்தே, முடித்தல் கூடும் என உணர்ந்திருந் தமையால், நார்முடிச்சேரல், தன் நாற்படையோடு சென்று பிறநாட்டுப்பேரரண்களைப் பாழ்பண்ணி, வெற்றி கொள்ளும் போதெல்லாம் அவ்வரண்களைக் காத்து நிற்கும் அவ்வவ்நாட்டுப் படைமறவர்களை கைப்பற்றிக் கொணர்வதையும், கொணர்ந்து, தன் நாட்டு ம க் க ள் ப ல் அன்னுர் கொண்டிருக்கும் தவருனவெறுப்புணர்ச்சி தான்ே அழிந்து போகும் வகையில் அவர்க்கு நல்வாழ்வு அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டு விளங்கின்ை.

இவ்வாறு, தன்நாட்டுக் குடிமக்களுக்குத் தன்னுலும், தன் பகைவராலும் உளவாகும் தளர்ச்சிகளைப் போக்கி அமைதி நிலவும் நல்லரசு நாடாத்தும் நார்முடிச்சேரல், இந்நிலத்து அரசர்க்கெல்லாம் எடுத்துக்காட்டவல்ல நல்ல அரசனதல் அறிந்த காப்பியாற்றுக் காப்பியர்ை, அவன் இவ்வுலகத்தவர் பொருட்டு நிறைவாழ்வு உடையதைல் வேண்டும் என்று விரும்பினர்; அதனுல், தம் பாடல் கேட்டு மகிழ்ந்து, தம்மைப் பெருவாழ்வில் இருத்த, அவன் வழங்கிய வற்ருப்பெருவளம் கண்டு அவ்வளத்தை வாழ்த்திய புலவர், அவ்வளம்வழங்கும் அவ ன் வாழ் வு ம் நெடிதுவாழ, வாழ்த்துரை பலப்பல வழங்குவாராயினர்.

ஒருவேந்தனுக்கு, உண்மையான வெற்றி, அவன் நாற்படையில் இல்லை; அது அவன் நாட்டு மக்களின் அமைதி பெருவாழ்விலேயே உளது. ஆதலின், களங்காய்க்கண்ணியான் தன்நாட்டு மக்களின் தளர்ச்சி போக்கிய தாளாண்மையினை

59