பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பரிசிலர் வெறுக்கை

வேந்தர்களும் வியக்கத்தக்க விழுநிதி படைத்த செல்வர் பலர் உளராகவும், பரிசில்பெறு பாணர்களும் வரிசைபெறு புலவர்களும் அவர்களைப் பாடாது, களங்காய்க்கண்ணிநார்முடிச்சேரல் ஒருவனையே பாடிப்பரவுவதைக் கண்ட புலவர் காப்பியாற்றுக் காப்பியனர், செல்வர் பலராகவும் அவரைப் பாட நினையாத இவ்வுலகம், இச்சேரலைப்பாடி மகிழ்வானேன்? ஏனைய செல்வர்க்கு இல்லாத சிறப்பு இவன்பால் யாது உளது? என்ற எண்ணங்கள் எழவே, நார்முடிச்சேரலொடு நெருங்கிப் பழகி, அவன்பால் பொருந்தியிருக்கும் நல்லியல்புகளை ஒவ். வொன்ருக ஊன்றிநோக்கத் தலைப்பட்டார். அவ்வாறு நோக்கிய புலவர்க்குப் புலனை நார்முடியான் நல்லியல்புகள் எண்ணிலாதனவாம்.

தன் ஆட்சி நிலவும் நாடு அளவிறந்த பரப்புடையதாதலும் வேண்டும்; பல்வகை வளங்களையும் ஒருங்கே பெற்ற பெருமை யுடையதாதலு வேண்டும் என்று விரும்பினன்; உடனே காடுகளை அழித்து நாடு கண்டான்; அந்நாட்டின் வளம் கொழிக்க, பெரிய பெரிய நீர்நிலைகள் பலப்பல எடுத்து நீர் வளத்தையும் நில்வளத்தையும் பெருக்கினன். வாணிகவளம் மிகுவதற்காம் வழிவகைளையும் வகுத் தான்் . நாட்டை இவ்வாறு செம்மைப்படுத்தி சீர்செய்த சேரலாதன், வளம் மிக்கநாட்டில், வளம் பெருக்கும் வழிகளைக் காண்பதினும், அவ்வளம், பகைவர் கைப்பட்டுப் பாழ்பட்டுப்போகாதவாறு அவற்றைக் காப்பதிலேயே, வேந்தர்கள் விழிப்புடையராதல் வேண்டும் எனஉணர்ந்தான்். அதல்ை தன் நாற்படையை நனிமிகப் பெருக்கினன். வேந்தன் ஏவல் பெற்றதும் விரைந்து

62