பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுதலாம். தோ ட் டி தந்த = அந்நாட்டான் காவல் உரிமையை உனக்குத்தந்த, தொடிமருப்பு யானை = தொடியணிந்த கோடுகளைக் கொண்ட யானைப் படையும். செவ்வுளைக் கலிமா - சிவந்த பி ட ரி யு ம் விரைந்த செலவும் உடைய குதிரைப்படையும். ஈகை வான்கழல் = பொன்னலான வீரக்கழலும். செயல் அமைகண்ணி = தொகுப்போன் கைத்திறம் காட்டும் தலைமாலையும் அணிந்த சேரலர் = சேரநாட்டு மறவரைக் கொண்ட காலாட்படையும் கொண்ட. வேந்தே ன அரசர்க்கரசே பரிசிலர் வெறுக்கை = பரிசிலரின் செல்வம் போன்றவனே! பாணர் நாளவை= பணர்கள் வீற்றிருக்கும் நாளோக்கக் காட்சி உடையாய்! வாள்துதல் கணவ = வனப்பொளிவீசும் நுதலினளாய அரசமாதேவியாரின் அன்புக் கணவனே மள்ளர் ஏறே = வீரர்க்குச் சிங்க ஏறு போன்றவனே. மையற விளங்கிய = போர்க்குற்றம் அற விளங்கும். வடு வாழ் மார்பின் = போரில் .ெ ப ற் ற புண்விளங்கும் மார்பினையுடைய. வகையில் செல்வ = குற்றம் இல்லாத புகழ்ச்செல்வம் உடையோனே! வானவரம்ப=வானவரம்பன் எனும் வான்பெயர் உடையாய்! இனியவை பெறினே = நுகர்தற்கினிய பொருள்களைப் பெற்றவழி, தனிதனி நுகர் கேம் தருக = தனியே இருந்து தனித்தனியே உண்ணக்கடவோம் அவற்தை எமக்கே தருக. என விழையாத் தாவில் நெஞ்சத்து = என்று விரும்பாத கெடாத நல் நெஞ்சம் உடைமையால். பகுத்துாண் தொகுத்த ஆண்மை=பிறர்க்கும் பகுத்து அளிக்கவென்றே பொருளைத் தொகுத்த ஆண்மை உள்ளம் கொண்டு. நீ பிறர்க்கென வாழ்தி யாகன்மாறு = நீ பிறர்க்கென்றே வாழ்கின்றன. ஆதலின். உலகத்தோரே பலர் மன்செல்வர் = உலகத்தவருள் பலர் நிலைபெற்ற பெருஞ்செல்வராகவும். எல்லாருள்ளும் = அ ச் .ெ ச ல் வ ர் பலரைக் காட்டிலும். நின் நல்லிசை மிகும் = உன் நல்ல புகழ் ஒன்றே சிறந்து விளங்குகிறது.

67