பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஏவல் வியன் பனை

பிறர்க்கென வாழும் பேருள்ளம் உடையய்ைப், பகை. வென்று திறைகொண்டும், நாட்டின் வளம் பெருக்கிப் பொன் பெருக்கியும், ஈட்டிய பெரும்பொருள் அனைத்தையும் தனக்கே உரிமையுடையதாக மதித்து, அவற்ருலாம் பயனைத் தனித்திருந்து நுகரும் கு று கி ய வாழ்வுடைய கைாது, அவற்றைப் பிறர் உடைமையாக்கிப் பிறரை வாழ்வித்தும் பெரியோனுய் வாழும் களங்காய்க்கண்ணியானின் நாளோ. லக்கப் பேரவைக்கண் வீற்றிருந்து, அவன் புகழ் உருவை அகக்கண்ணுல் கண்டும், அவன் வடிவழகைப் புறக்கண்ணுல் கண்டும் களித்திருக்கும் நிலையில், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் எனும் அவன் பெரும்பெயர்க்கு ஒருபுடைக் காரணமாய், அவன் த லை யி ற் கி ட ந் து அழகுதரும் நார்முடியின் வனப்பினைக் கண்டார், புலவர் காப்பியாற்றுக்காப்பியர்ை.

விளிம்பிலே மணிகள் வைத்து இழைக்கப்பெற்ற ஒரு பொன்கூடு; நார்கொண்டு பின்னப்பட்டுளது அதன் மேற்புறம், இழைத்து வைத்தாற்போலும் புள்ளிகள் நிறைந்த கழுத்தும், குறுகிய சிறு முதுகும் உடையவாய அழகிய புருக்கள், தங்களைப் பிடிக்கக் கருதும் வேடர்கள் விரித்து வைத்திருக்கும் வலையோ எனக்கண்டு அஞ்சத்தக்க நிலையில், உலர்ந்து இலைகள் உதிர்ந்து நிற்கும் வேலமரத்தின் கிளைகளில், சிலந்திகள் தம்வாய் எச்சில் நீரால் பின்னி வைத்திருக்கும், வலையை நினைப்பூட்டும் வகையில், அப்பொற் கூட்டின் மேற்புறம், மறையுமாறு பின்னிக்கிடக்கும் அந்நாரின் செம்மையற்ற தேரற்றம் மறைந்து, சிறந்து காட்டுவான்

63