பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலிக்கத் தொடங்கிவிடும்; அதுகேட்ட களங்காய்க்கண்ணி யானும், போர் வேட்கை மிகுந்து, தனக்கு அடங்கிப்பணியாது, ஆற்றல்மிக்கு அலையும் அப்பகைவரின், பற்றற்கரிய பேரரண் களைப் பாழ்செய்யும் பெரு வெறிகொண்டு, கருதிய உயிரைக் கைப்பற்ருதுமீளாக் கூற்றுவன்போலும் கடுஞ்சினமும் உடையணுகிப், போர்க்கோலம் பூண்டு புறப்பட்டு விடுவன்.

நார்முடிச்சேரலின் போர் வேட்கை அத்தகைத்தாதலே அறிந்திருந்த அவன் படையில் பணிபுரியும் மறவர்களும், அவனைப்போலவே போரையே விரும்பி, அதுவாய்க்கும் காலத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருப்பர். நார்முடிச் சேரலின் நாற்படை வீரர், ஆண்மை ஆற்றல்களில் மட்டுமே களங்காய்க்கண்ணியானப் பி ன் ப ற் றி ஒழுகினரல்லர்; தங்கள் மன்னன்பால் காணலாம் மாண்புகள் அனைத்தையுமே தாமும்கொண்டு தலைசிறந்து விளங்கினர்; அதனல், அமர் மேற்கொண்டு சென்று அழிவுத் தொழில் புரிவதையே கடமை யாகக் கொண்ட அவர்கள், களங்காய்க்கண்ணியான் தனக்கென வாழாது, பிறர்க்கெனவே வாழும் பெரியோணுதல் கண்டு, தாமும், தம் நாடு நோக்கிவரும் பாணர் முதலாம் பரிசிலர்க்கு இல்லை (எனக்கூறி அறியாராய், தம்மால் இயன்றன எல்லாம் வழங்கி, மன்னனுக்கேற்ற மறவர் எனும் மாண்புமிகு வாழ்வினராய் வாழ்ந்து காட்டும் வனப்பினையும் கண்டு, தன்னைப்போலவே, தன் படையாளரையும் தகுதி மிக்காராய் வாழப் பண்ணும் நார்முடிச்சேரலின் நல்லியல்பு களை நாவாரப் பாராட்டி மகிழ்ந்தார் புலவர் காப்பியர்ை.

தன் முழக்கினைக் கேட்ட மறவரைப் போர்க்களம் போக்கும் பெருமை போர்முரசிற்கு இருப்பது அறிந்து, களங்காய்க்கண்ணியானின் கருத்தைக் குறிப்பால் உணர்ந்து கடன்ஆற்றும் அறிவுடையாரோடு, அதையும ஒப்ப மதித்து,

70