பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சிலால் தொடுத்த அசைகின்ற வலையைப்போல. இலங்கு மணிமிடைந்த பசும்பொன் படலத்து = ஒளிவீசும் மணிகள் விளிம்பிலே கோத்த, பசியபொன்னுல் பண்ணிய கூட்டின் புறத்தே. அவிர் இழை தைஇ = வெண்ணிய நூல்கொண்டு தொடுத்து. மின் உமிழ்பு இலங்க - ஒளி மிகுந்து விளங்கும் வகையில், சீர்மிகு முத்தம் தைஇய=சிறந்த மூத்து வடங்களால் கட்டப்பெற்ற, நார்முடிச்சேரல் = நார்முடியின அணிந்த சேரலாதனே ! நீ பிறர்க்கென வாழ்தி ஆகன்மாறு - நீ தனக்கென வாழாது பிறர்க்கென்றே வாழ்கின்றாய் ஆதலின். நின் போர் நிழல் பு க ன் று = உன்னுடைய போராகிய நிழலேயே விரும்பி. நின் மறம் கூறு குழாத்தர்= உன்மற மாண்புகளையே மாற்ருர் அறியத் துாற்றித் திரியும் உன் மறவர்களும். எமக்கு = என் போலும் இரவலர்க்கு. இல் என்னுர் = இல்லை என்று கூருது வரையாது வழங்குவர்.

மரக்கிளைகளில், பின்னிவிடப்பட்டிருக்கும் சிலந்திக் கூட்டினைத் தம்மைப் பிடிக்க வேடன் விரித்திருக்கும் வலையோ எனப் புரு இனம் அஞ்சும் என்பதை,

'தொலைவில் வேட்டுவன் வலைபரிந்து போகிய

கானப் புருவின் சேவல், வாய்நூல்

சிலம்பி அஞ்சின வெறுஉம்' என்ற நற்றினை வரிகளும் (189) உணர்த்துவது காண்க,

73