பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மட்டோ! உன் உறவினராய் உ ன் னு ட ன் வரும் பாணர்க்குப், பொன்னுல் பண்ணிய தாமரை மலர்களை அளித்து அன்பு காட்டுவன்; உனக்கும், உன் சுற்றத்தினர்க்கும் கு ற் றே வ ல்பு ரி ந் த வ றே உடன்வரும் இளையோர்க்கு, அவர் விரும்பும் மதுவை வேண்டுமளவு வழங்குவன்; இவ்வாறு அவளுல் சிறப்பிக்கப் பெற்றமையால் சிந்தை ம கி ழ் ந் து அவனை வாழ்த்துவீராயின், அதுகேட்டு மகிழும் அவன், தோட்டி துணைசெய்யப், பாகர்ஏவும் ஏவலைத், தட்டாது நின்று தொழில்புரிந்து அப்பெருமையால், தம் தந்தங்கள் பொற்பூண்சூட்டப் பெறுவது கண்டு, அக்களிப்பு மிகுதியால், பொன்னிறத் தீப்பொறிகள் வானளாவ எழுந்து படர, நாட்டுமக்கள் தம் நாட்டகத்தே நின்று நோக்கினும் காணலாம் வகையில், வானுற எழுந்து எரியும் காட்டுத்தி போலும், தம்கொடுமையைக் கைவிட்டுக், கடமைநெறிநிற்கக் கற்றுக்கொண்ட, வலிமிக்க களிறுகளைக், கணக்கின்றித் தந்து அனுப்புவன்; ஆகவே, விறலி! உன் வறுமை தீரவேண்டின்,

அவன் பால் விரைந்து செல்வாயாக!' என்று கூறினர்.

புலவர் கூறிய பொருள்பொதிந்த உரைகளைக் கேட்ட விறலி, தன்வறுமை அப்போதே தீர்ந்து விட்டது போல் மகிழ்ந்தாள். அம்மகிழ்ச்சி மிகுதியால், அவள் அளிக்கும் பொற்பூண்பூண்டு ப்ொலிவுபெற்றுத் திகழும், தன்மேனிக்கு உவமையாகப், புலவர் காட்டிய வேங்கைமரத்தின் வனப்பினைக் காண்பான் வேண்டி, தாங்கள் இருந்து உரையாடும் ஆங்கே வளர்ந்திருந்த, வேங்கையை நோக்கிய விறலி, அவ்வேங்கைக்கு அணித்தாக நிற்கும், உன்னமரத்தைக் காணவே, அவள் உள்ளமகிழ்ச்சியெல்லாம் ஒரு நொடியில் மறைந்து விட்டது. களங்காய்க் கண்ணியானுக்குரிய நாட்டகத்தே நிற்கும் அவ்வுன்ன மரம், வாடிஉலர்ந்து கிடந்தது; உன்னம் தழைத்தால், அந்நாட்டிற்கு உரியோனும் தழைப்பன்; அது

76