பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரும்பி, அத்தகையாரையே தேர்ந்து பணிகொண்டான்; இவ்வகையால் பண்பும் பெருமையும் மிக்கதாகப் படை அமைந்துவிடவே, பகைவர் மீது போர்தொடுத்துப் போர்ப்பூ அணிந்து புறப்பட்டு, பகைவர்தம் பாசறைக்கு அணித்தாக உள்ள, கரந்தைக்கொடி படர்ந்திருக்கும் வயல்களில் பாடி அமைத்து விட்டான். அது அறிந்த அவன் பகைவர்களும், தம் நாற்படையோடு போர்க்களம் புகுதற்கு வேண்டும் பணி களை மேற்கொண்டனர்; அந்நிலையில், அவர் படைகளைத் தலைமை தரங்கி நடாத்திச் செல்லும் படைத்தலைவர்கள், அவ்வரசர்களை அணுகி, ஐயன்மீர்! போர்முரசு முழங்கப், படை யோடு புறப்பட்டு வந்து, வயல்வெளியில் பாடிகொண்டு விட்டான் நார்முடியான்; இந்நிலையில், அவளுல் நமக்கு வரும் கேட்டினைப்போக்கி நம்மைக் கா க்க வ ல் ல படைத்துணை அளிப்பார் ஒருவரும் இலர். ஆகவே போர்விரும்பும் ஒரு சிலரோடு புறப்பட்டு அவன் நிற்கும் போர்க்களம் நோக்கிப் போகாதீர்கள்; போவதே உம் விருப்பமாயின், வருவானா உடன் கொண்டு செல்லுங்கள்; யாம்வாரேம்' என்றுகூறிப் போருக்குப் புறப்பட மறுத்து விட்டனர்; படைத்தலைவர் மறுக்கவே, அம்மன்னர்கள் செய்வது அறியாது செயலொழிந்து கிடந்தனர்! இதை அறிந்தாளுயினும், இன்று அடங்கிப் போகும் இவர்கள், பிறிதொருகால் போர்தொடுத்து எழினும் எழுவர்; அதுமட்டுமன்று. போரைக் கைவிடுவதா. யின், கண்ணியையும் முடியையும் கைப்பற்றுவது இயலாது; வஞ்சினம் பொய்த்து விடும். ஆகவே, அவர் அடங்கியிருப்பினும், அவர் அரணை அழித்து வெற்றிக்கோடல் வேண்டும் எனத்துணிந்து களம்புகுந்து "கடும்போர் புரிந்து, அவர்களை அறவே அழித்து வெற்றிகொண்டான்; அவர் ஆட்சியின் அவலநிலைக்கு அஞ்சி நாடகன்று வாழ்வார் அனைவரையும். வரவழைத்து வாழ்வளித்தான்்; தான்் பெற்ற வெற்றி குறித்து விழாக்கொண்டாடி மகிழ்ந்தான்்.

78