பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“விறலி அவன் பேராற்றலைப் புலப்படுத்த இந்நிகழ்ச்சியொன்றேபோதும்(என்ருலும், பிறதொன்றும் கூறுகின்றேன். தன்குலத்தவர் எனத் தருக்கித்திரிந்த பகைக்குலத்தவரை வென்று, அவர் கவர்ந்து சென்ற சேரநாட்டின் செல்வமாம் பனந்தோட்டுக் கண்ணியையும் நவமணிப் பொன்முடியையும் மீளவும் பெற்றதோடு அ ைம ய ர து, அப்பகையரசர் எழுவர்க்கும் உரிய பொன்முடிகளைக் கைப்பற்றி, அவற்றை அழித்து, அழகிய ஒர் அணியாக்கி, அந்த அணியைத் தன்அகன்றமார்பில் அணிந்து காட்டிய அக்களங்காய்க்கண்ணியான், தன் வெற்றிப் புகழை மேலும் பெருக்குவான் விரும்பி, பொன்வளம் கொழிக்கும் கொண்காணமலைக்கு உரியவனும், பொற்றேர்மீது பொலிவுபெற அமர்ந்து உலாவருவோனும், அக்கால மறவரெல்லாம் :கண்டு அஞ்சத்தக்க ஆற்றல் மிக்கவனும் ஆகிய நன்னன்மீது போர்தொடுத்துச் சென்று, அவன் காவல் மரமாம், :வாகைமரத்தை வேரற்றுப்போக வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டு வீறுபெற்ருன். ஆகவே, விறலி! உன்னம் காட்டும் இவ்வாகாநிமித்தம் அவனை ஒன்றும் செய்து விடாது; உன்னம் தீக்குறி காட்டுகிறது என்பதை அறிந்தும், அதல்ை தனக்கு எக்கேடும் வந்துருது என்ற தளராத உறுதிமிகு உள்ளம் கொண்டே, உளம்மகிழும் உறைவிடம் நோக்கிச் சென்றுளான்; ஆகவே விறலி! உனக்கு அவ்வச்சம் வேண்டாம்; அவன்பால் இப்போத விரைந்து செல்வாயாக!” -

இவ்வாறு கூறி, புலவர் காப்பியாற்றுக் காப்பியனர் பாடிய இவ்விறலியாற்றுப்படைச் செய்யுளில், காட்டில் பிறந்து, பரந்து வானுற உயர்ந்து, காட்டிற்குச் சேணெடும் தொலைவில் உள்ள நாட்டில் வாழ்மக்கள், தாம் இருக்கும் இடத்தேஇருந்து நோக்கினும் காணலாம் அளவில், பெருகிய பெருந்தி எனும் அரிய பொருள்நயம், தோன்ற சுருங்கிய

79