பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்நிழல் புகன்ற சுற்றமொடு = போரால் உண்டாம் புகழ் விரும்பும் உம் சுற்றத்தாரோடு, நின் தான்ே ஊர்முகத்து இருஅலியர்=உம் நாற்படை, அவன் வந்து தங்கியிருக்கும் பாசறைக்கு அணித்தாகச் சென்று தங்காது ஒழிவதாக, இனிக் களைநர் யார் பிறர்=தங்கிவிட்டால் நம் துயரைக் களையவல்ல துணையரசர் யாவர் உளர் ஒருவரும் இலர். என=என்றுகூறி. பேணி = படைதொடாமையை மேற்கொண்டு. மன்எயில் மறவர்=மாற்றரசர்களின் அரண்களைக் காத்து நிற்கும் படைத் தலைவர், ஒலி அவிந்து அடங்க=போர் ஆரவாரம் ஒழிந்து அடங்கி விட்டாராக, ஒன்னர் தேய=பகைவர் அழிந்து போகுமாறு. பூ மலைந்து உரைஇ=போர்ப்பூ அணிந்து, வெண்தோடு நிரைஇய வேந்துடை அருஞ்சமம்= வெள்ளிய பணத்தோட்டு மாலை அணிந்த சேரர் குலத்தவர் எனக்கூறப்படும் வேந்தர்களுடைய. அருஞ்சமம் கொன்று - வெல்லற்கரிய போரைவென்று. புறம் பெற்று = அவர்களைப் புறங்காட்டப்பண்ணி, மன்பதை நிரப்பி = அப்பகைவர்க்கு அஞ்சி நாடுவிட்டு அகன்றரை மீட்டும் கொணர்ந்து வாழச் செய்து. வென்றியாடிய கொடித்தோள் மீகை = வெற்றி விழாக்கொண்டாடிய, தொடியணிந்து மேம்பட்ட கையினையும். எழுமுடி கெழீஇய திருளுெமர் அகலத்து=பகைவர்களில் ஏழு அரசர் முடிகளை அழித்துப் பண்ணிய அணிகிடந்து அழகு செய்யும், வெற்றித் திருமகள் விரும்பும் அகன்ற மார்பினையும். பொன்னம் கண்ணி = பொன்னலான தலைமாலையினையும். பொலந்தேர் = பொன்னலான தேரும் உடைய, சுடர்வி வாகைக் கடிமுதல் தடிந்த = ஒளிவீசும் மலர்கள் நிறைந்த வாகை மரத்தை வேரோடும் வெட்டி அழித்த, தார்மிகு மைந்தின் = தூசிப் படையோடு செல்லவல்ல பேராண்மை யினையும் உடைய. நார்முடிச் சேரல்=நார்முடிச் சேரலாதன். புன்கால் உன்னம் சாய = புல்லிய அடிமரத்தையுடைய உன்னம் உணர்த்தும், நிமித்தம்கெட்டழியும் வகையில்,

82