பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு : பாடற்பண்பு

காப்பியாற்றுக்காப்பியனர் பாடிய பாக்கள், களங்காய்க் கண்ணிச் சேரலாதனைப் பாடிய பதிற்றுப் பத்து, நான்காம் பத்தில் இடம்பெற்ற பத்துப்பாடல்களே. ஆயினும், அப்பாக்கள் அளிக்கும் பாநலம் நயந்து பாராட்டற்கு உரியது.

புலவர் பாடிய பாக்கள் பத்தே எனினும், அவற்றில் அவர் ஆண்டிருக்கும் உவமை அணிநலங்கள் எண்ணில; அவற்றுள் ஒருசிலவற்றின் நயத்தை ஈண்டு நுகர்வாம்.

தான்் பிறந்த சேரர் குலத்துவந்த தன்முன்னேர்கள், யாது காரணத்தாலோ, நிலையில் தாழ்ந்து போக, அவர் வாழ்க்கையில் இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரத்தில், தான்் பிறந்ததும், தன் ஆண்மைப் பேரொலியால், அவர் களின் துயர்துடைத்து அவர் வாழ்க்கையில், சூழ்ந்துகிடந்த துன்ப இருளைப்போக்கி, ஒளிவீசச் செய்த களங்காய்க்கண்ணியானுக்கு, இராக்காலத்தில் மையிருள் எனக்கூறும் காரிருள் சூழ்ந்து கிடந்ததாகக், கீழ்வானத்தில் தான்் தோன்றி. அம் மையிருளைக் கெடுத்துப் பேரொளிகாலப் பண்ணும் இருகோடும் கூட முழுவடிவம் பெற்ற முழுத்திங்களை உவமை காட்டியிருப்பது, அவற்றுள் ஒன்று. -

'மணிநிற மையிருள் அகல, நிலாவிரிபு

கோடுகூடு மதியம் இயல்உற்ருங்குத்

துளங்குகுடி விழுத்துணை திருத்தி”. .

-பதிற்றுப்பத்து: 31: 11-13

85