பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரித்து வைக்கும் வலையை உவமை ஆக்கி, உவமைக்குமேல் உவமை கா ட் டி யி ரு க் கு ம், புலவர் காப்பியாற்றுக் காப்பியனரின் புலமை நலம் போற்றுவதற்கு உரியது;

'நூலின் இழையா, நுண்மயிர் இழைய பொறித்தபோலும் புள்ளி எருத்தின் புன்புறப் புறவின் கணநிரை அலற அலந்தலை வேலத்து உலமை அஞ்சினைச் சிலம்பி கோலிய வலங்கற் போர்வையின் இலங்கு மணிமிடைந்த பசும்பொன் படலத்து அவிரிழை தைஇ, மின்உமிழ்பு இலங்கச் சீர்மிகு முத்தம் தைஇய நார்முடி’’

--பதிற்றுப் பத்து: 39; 9.17

போர்க்களத்தில், அச்சமோ, இரக்கமோ அற்றுப் போர்ஆற்றுவது, சிறந்த வீரனுக்கு ஆண்மை. 'பேராண்மை என்பதறுகண்' (குறள்: 773) என வீரனுக்கரிய ஆண்மை இலக்கணத்தையும், பிறன் ஒருவன் மனைவியைக் காமக்குறிப்போடு நோ க் கா ைம, உலகில் உள்ள ஆடவர் அனைவர்க்கும் ஆண்மை தரும் செயலாம், 'பிறன் மனே நோக்காத பேராண்மை” (குறள்: 38) என ஆண்மைக்குரிய இலக்கணங்களை, அடுக்கடுக்காக எ டு த் து வைத்துச் சென்றுள்ளார் திருவள்ளுவர்.

ஆனால், காப்பியாற்றுக் காப்பியனர், பேராண்மைக்கு ஒரு புது இலக்கணம் வகுத்துள்ளார். வாழ்வும் வளமும் குன்ற, தளர்ந்து போன தன் குடிகளின், அத்தளர்ச்சிகளை அறவே துடைத்துவிட்டு, தன்கொற்றத்தால், தன்கோலாட்சி நலத்தால், அவர்களை வாழ வைப்பதே, அரசர்க்கு ஆண்மை.