பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பதிற்றுப்பத்து தெளிவுரை

இவ்வாறு, சேரவரசர்கள் பெற்ற வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்தன, அந் நாளையத் தமிழ்மறவர்களின் மறமேம்பாடும், கட்டுப்பாட்டுச் செறிவும், இனவுணர்வுப் பெருமிதமும், அவர்களைத் தலைமையேற்று நடத்திய தமிழர சர்களின் மனவலிமையும், சால்பும், போர்ப்பயிற்சி நலமும், தமிழகத்தின் வற்ருத பெருவளமுமே யாகும். இவற்றையும் இச்செய்யுட்கள் நன்ருக உணர்த்துகின்றன. 哆 சேரவரசர்களின் அளவுகடந்த தமிழ்ப்பற்றையும், தமிழறிந்த சான்ருேரை அவர்கள் போற்றிப் புரந்துவந்த பெருஞ்சால்பையும். நினைத்தால், வியப்பால் விம்மிப் பெரு மிதமடையலாம். அத்தகைய தமிழ்ப்பற்றும் புரக்கும் தன்மையும் கொண்ட தலைவர்கள் பிற்காலத்தே தோன்ருமை யான ஊழ்க்கேட்டையும் அடுத்துக் கண்ணிரோடு நினைக்கின் ருேம். இச்செய்யுட்களைப் பாடிய புலவர்க்குச் சேரமன்னர்கள் அளித்த பெரும் பரிசில்களும் பெரும்பாராட்டுகளுமே இத்தகைய எண்ணத்தை நம்பால் எழுப்புகின்றன!

தளராத தமிழ்ப்பற்றும், தமிழறம் பேணும் தகைமையும் கொண்டோராயினும், புதியராக வந்து வாழ்வுகண்ட வேற்றினத்தாரின் வழிபாட்டு மரபுகளையும் இவர்களுட் சிலர் பேணிப்புரந்தனர் என்பதையும் இந் நூலாற் காணுகின்ருேம். இதுவும் இவர்களது பெருமாண்பு ஆகும். இதன் பின் விளைவுகள் விபரீதமாயின செய்தியும் உண்மையே!

‘இவன் இன்ஞரின் மகன்' எனத் தந்தையின் பெயரையே குறித்துச் சொல்லப்படும் மரபினுக்கு மாருக 'இன்னன் இன்னவனுக்கும் இன்னவளுக்கும் பிறந்த மகன் எனத் தாயின் பெயரையும் சேரவே சொல்லும் சிறந்த குடிமரபு உரைக்கும் மரபையும் பதிற்றுப்பத்துப் பதிகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சேரநாட்டாரிடைத் தாய்மையைப் போற்றும் இந்தத் தலையாய பண்பு பண்டே நிலவியதனையும் வியப்புடன் காண்கின்ருேம். -

இப்போது, இப் பதிற்றுப்பத்து நூலின் முதற்பத்தும் பத்தாம் பத்தும் கிடைக்கப் பெறவில்லை. இரண்டு முதலாக