பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

பதிற்றுப்பத்து தெளிவுரை

120 பதிற்றுப்பத்து தெளிவுரை

லும் என முரஞ்சியூர் முடிநாகராயரின் புறப்பாட்டு வாக்கா லும் (புறம். 2), பொறையெனப்படுவது போற்ருரைப் பொறுத்தல்' என்னும் கலிப்பாட்டு விளக்கத்தானும் (நல்லந் துவளுர்-நெய்தற்கலி 16) அறிக.

33. வரம்பில் வெள்ளம் !

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர்: வரம்பில் வெள்ளம். இதனுற் சொல்லியது : நார்முடிச் சேரலின் போர்வெற்றிச் சிறப்பு. -

(பெயர் விளக்கம் : கடல் நீரின் மிகுதியை வரம்புடைய வெள்ளம்' என்று ஆக்கி, சேரலின் தானை வீரர் பெருக்கத்தை 'வரம்பில் வெள்ளம் என அதனினும் மிகுதியுடையதாக வியந்து கூறிய உவமைநயத்தால் இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது.

இயங்குகின்ற இரு படைகளது எழுச்சியின் ஆரவார ஒலியென இதனைக் கொண்டு, இஃது இயங்குபடை அரவம்' என எடுத்துக் காட்டுவர் ஆசிரியர் நச்சினர்க்கினியர் (தொல். புறத். 8. உரை.)

"கடிமரத்தான்' என்பது முதலாக வரும் மூன்றடிகள் வஞ்சியடிகளாதலின் வஞ்சித் தூக்கும் கூறப்பெற்றது.

'வரம்பில் வெள்ளம் கருதினென்' என, எடுத்துச் செலவை மேலிட்டுக் கூறியதனலே வஞ்சித் துறைப்பாடாண் பாட்டு' என்றனர்.)

இறும்பூதால் பெரிதே கொடித்தேர் அண்ணல் வடிமணி அனைத்த பனமருள் நோன்தாள் கடிமரத்தால் களிறனைத்து நெடுநீர துறைகலங்க மூழ்த்திறுத்த வியன்தானையொடு 5 புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம் வாள்மதி லாக வேல்மிளை உயர்த்து வில்விசை உமிழ்ந்த வைம்முள் அம்பின்