பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் பத்து I 21

೧ಆಮQTು ೯ಸಿಹಿಹಿ வளைஇய அகழிற் காரிடி உருமின் உரறு முரசின் 1 O

கால்வழங்கு ஆரெயில் கருதின் போரெதிர் வேந்தர் ஒருஉப நின்னே!

தெளிவுரை : கொடிகள் விளங்கும் தேர்ப்படைகளை உடையவளுகிய தலைமையாளனே! நின் பேர்ர்ச்செயல்தான் வியப்பினுல்.பெரிதே யாகும். திருந்திய மணிகளைப் பக்கத் திலே கொண்ட, துடியை யொத்த வலிய தாளையுடைய களிற்றினைப் பகைவரது காவன்மர்த்திலே கொண்டுபோய்க் கட்டின. ஆழமாகிய நிரையுடைய நீர்த்துறைகள் எல்லாம் கலங்குமாறு மொய்த்துச்சென்று, முற்பட்டுத் தங்குவது நின் தூசிப்படை. அதனேடு, பகைவர் நாடு கெடும்படியாக, எல்லையற்ற வெள்ளம்போன்ற நின் பெரும் படையானது. வளைந்து வளைந்து அணிவகுத்துச் செல்லும். அப் படை மறவர்தம் வாட்படையே நினது கோட்டை மதிலாகவும், உயர்ந்த வேற்படையே நினது காவற்காடாகவும், விற்கள் விசையோடு வெளிப்படுத்தும் கூர்மையான முள்போன்ற

அம்புகளும், சிவந்த முனையுடைய பிற படைக்கருவிகளும்

நின்னைச் சூழ்ந்திருக்கும் அகழியாகவும் கொண்டவனுக, நீ பாசறையிட்டுத் தங்குவாய். கார்காலத்தே இடிக்கும் இடியி னைப்போல ஒலிக்கின்ற முரசினையுடையதும், காலால் நடக் கின்ற் சிறப்பையுடையதுமான, நின் பகைவரால் கடத்தற் கரிய அரணைப்பற்றிக் கருதினல், நின்ளுேடு போர்செய்யக் கருதிய வேந்தர்கள், நின் வலிமைக்கு முன் எதிர்நிற்க மாட் டாராய்த் தம் மனவலி அழிந்தாராக ஒடி ஒளிவர். இதுதான் பெரிதும் வியக்கத்தக்கது பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : அண்ணல் . தலைமைப் பாடு கொண்டவன். வடிமணி - திருந்திய ஒலியைச் செய் யும் மணி; வார்த்துச் செய்த மணியும் ஆம். அணைத்தஇருபக்கமும் தொங்கக் கட்டியிருக்க விளங்கும். பணை - அடி: உடுக்கை. நோன்மை - வலிமை. கடிமரம் - காவல்மரம். பகைவரது காவன்மரத்தில் களிற்றைக் கட்டுதல் அவரைத் தான் வெற்றி கொண்டதனைக் காட்டும் அடையாளமாம்; அவர் அதனைத் தடுக்க முற்பட்டுப் போரியற்ற வேண்டும்; அல்லது பணிந்து போக வேண்டும். இரண்டுமன்றி ஓடி மறைபவர் மறப்பண்பினர் ஆகார். நெடுநீர துறை கலங்க’ என்றது, பகைவர் நாட்டிலுள்ள நீர்நிலைகளை அழித்தலை க்