பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் பத்து

123

நான்காம் பத்து 123

செவ்வுளைய மாவூர்ந்தும் *. நெடுங்கொடிய தேர்மிசையும் 5

ஒடை விளங்கும் உருகெழு புகர்நுதல் பொன்னணி யானை முரண்சேர் எருத்தினும் மன்னிலத் தமைந்த................. • மாரு மைந்தர் மாறுகிலை தேய முரைசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழ 10

அரைசுபடக் கடக்கும் ஆற்றல் புரைசால் மைந்த நீ யோம்பன் மாறே!

TT-–___. ..

தெளிவுரை : ஒப்பற்ருேளுகிய பெருவேந்தனே! போர்க் களத்திலே பகைவர்க்குப் புறங்கொடுத்து ஓடாத மேற் கோளினையும், தாம் முன்னர்ப் போர்த்தொழில்களைச் செய்து சிறப்புற்ற ஒள்ளிய செயல்கள் பொறிக்கப்பெற்ற கழலணிந்த கால்களையும், பெரிய நிலத்தில்ே தோயும்ாறு தொங்கக் கட்டிய விரிந்த நூலாடையினையும் உடையவர் நின் பகைவர் . அவர்கள் சிவந்த பிடரிமயிரினையுடைய குதிரைகளை ஊர்ந்த படியும், நெடிய கொடி பரக்கும் தேர்களைச் செலுத்தியபடி யும், முகபடாம் விளங்கும் அச்சம் பொருந்திய புள்ளிகளைக் கொண்ட நெற்றியினையுடைய, பொன்மாலை அணியப்பெற்ற யானைகளின் வலிமை பொருந்திய பிடரின்கண் அமர்ந்து அவற்றைச் செலுத்தியபடியுமாக, நின்னை எதிர்த்துப் போரிடு தற்கும் முற்பட்டனர். பொருந்திய நிலத்தின்கண் அமைந்த மாறுபடாத வல்லமையுடையவரான அவர்களின், நினக்கு மாறுபட்டெழுந்த போர் நிலையானது கெடவும், முரசங் களின் ஒலி முழக்கையுடைய பெரும் போரானது அவர்கள ளவில் சிதைந்து போகவுமாக, களத்தின்கண் ஆரவாரவொலி எழும்படியாக, அவர்களின் அரசர்கள் பட்டு வீழுமாறு கொன்று, நீதான் அப் போர்களிலே வெற்றி பெற்றனே! அத் தகைய போராற்றலால் உயர்வடைந்த வல்லாளனே! நீ, நின் படைமறவரைக் காக்கும் சிறந்த முறையினலேதான் அவர்கள் நினக்குத் தோற்ருேராக நினக்கஞ்சி நின்னைவிட்டு அகன்றனர் என்பதாம்.

சொற்பொருளும் விளக்கமும் : ஒடா - போரிற் புறங் கொடுத்து ஓடாத பூட்கை - மேற்கோள். ஓடாப் பூட்கை