பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் பத்து

125

நான்காம் பத்து 125

புரைசால் மைந்தரீ ஓம்பன் மாறே உரைசான் றனவால் பெருமகின் வென்றி இருங்களிற் றியானை இலங்குவான் மருப்பொடு நெடுந்தேர்த் திகிரி தாய வியன்களத்து அலகுடைச் சேவற் கிளைபுகா வாரத் 5 .

தலைதுமிந்து எஞ்சிய மெய்யாடு பறந்தலை அந்திமாலை விசும்புகண் டன்ன

செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப்

பேஎய் ஆடும் வெல்போர்

வீயா யாணர் கின்வயி னனே! 1 O

தெளிவுரை : உயர்ச்சி மிக்க வல்லாளனே! நீதான் நின் படை மறவரை முறையாகப் பேணிக் காத்தலினலே நின் வெற்றியின் பெருமையானது, புகழ்நிறைந்த தன்மை யுடையது ஆகியது. பெரிய களிற்றியானைகளின், விளங்கும் வெண்கொம்புகளோடு, நெடுந்தேர்களின் சக்கரங்களும் பரந்தோடினவாகிய பெரிய போர்க்களத்திலே, தம் பெண் பருந்துகளோடும் கூடியவையாய்ச், சேவல்களின் இனம் புகுந்து, வீழ்ந்து பட்டோரின் உடலங்களை நிறையத் தின்ற படியிருக்கும். அவ் வேளையிலே, தலை வெட்டப்பெற்று எஞ்சி யிருந்த ஒர் உடலமானது, போர்க்களத்தின் உட்பகுதியாகிய பக்கத்தே எழுந்து நின்று ஆடத் தொடங்கிற்று. அந்தி மாலைப் பொழுதிலே, செவ்வானத்திற் கண்ட்ாற்போன்று செவ்வொளி கொண்டதான குருதி பரவியிருக்கும் சிவந்த மன்றத்திடத்தே, அவ்வுடலின் ஆட்டத்திற்கேற்பப் பேய் களும் ஆடத்தொடங்கின. இதல்ை, வெற்றிப் போரால் வந்தடையும் குறையாத புதுவருவாய் எல்லாம் நின் னிடத்தே வந்தடைந்தன. பெருமானே! *

சொற்பொருளும் விளக்கமும் : புரைமை - உயர்ச்சி. புரை சால் - உயர்ச்சி மிக்க; உயர்ச்சியாவது பகைவரையும் அவர் பணிந்த காலத்து அவர் உயிரைக் காத்து, அவர் தீங்கைப் பொறுத்தல். உரை சான்றன - புகழ் நிறைந்தவாயின; புகழால் சிறப்புற்றன. வென்றி- வெற்றி. வான் மருப்புவெண் மருப்பு: களிறுகள் சினத்தோடு நிலத்தைச்சேரப் பகைவரைக் குத்துதலாலும், தேர்களின் சக்கரங்களாலும் எங்கணும் அவ் வடையாளங்கள் பரந்து கிடந்த பெருங்கள்ம் என்க: இதனற் போரது கடுமை பெறப்படும். "தலை துமிந்து எஞ்சிய மெய்