பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

பதிற்றுப்பத்து தெளிவுரை

128 பதிற்றுப்பத்து தெளிவுரை

பாய்ந்துகொண்டிருக்கும். இத் தன்மைவாய்ந்த கொடும் போர்கள் பலவற்றை நீயும் செய்குவை! இவற்ருல் வந்தடை யும் நின் வளமை நிலைத்து வாழ்வதாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கம் : வீயா யாணர் - கெடாத புதுவருவாய். வயின் - இடம். தாவாது - கெடாது. வயவு - வலிமை. மலிபெறு வயவு - நாளுக்குநாள் மிகுதிபெறுதலைக் கொண்ட வலிமை. மல்லல் - வளம். உள்ளம் - உள்ளத்தின் உரம், மணவூக்கம். வம்பமர் - புதிதான போர்; பழம் பகை வரேயன்றிப் புதியராக வந்து பகைத்தவர் செய்யும் போர்: இவர் வட்புலத்திலிருந்து வந்தாராகலாம். கடந்து - எதிர் நின்று பொருது வெற்றிகொண்டு. முன்பு - வலிமை. தலைச் சென்று. பகைவரது நாட்டெல்லைக்குட் சென்று. தடிதல் - வெட்டல். தடிபு வெட்டப்பட்டு. வாள் மயங்கல் - இருதிற பண்டயினரின் வாட்களும் தம்முட் கலத்தல். கடுந்தார் - கடுமையான தூசிப்படையினர். மாக்கள் - போர் மறவர். படுபிணம்-களத்திலே பட்டு வீழும் பிணம். பிணம் - உயிரற்ற உடல்கள். உணியர் - உண்ணும் பொருட்டு. எருவை . கழுகு, இதனைத் தலை வெழுத்து உடல் செந்நிறமாயிருக்கும் பருந்தென்பர் (புறம். 64). பொறித்த போலும் வானிற எருத்தின் அணிந்த போலும் அஞ்செவி எருவை' என்று அக நானூறு கூறும் (அகம். 193). எழாஅல் - இராசாளி: இது பருந்து வகையுள் ஒன்று. குடுமி - உச்சிக் கொண்டை. நிவப்பு - உயர்ச்சி. நிரை - வரிசை. பிணக்-குவியல்களின் பாரத்தால் நிலம் சரிந்தது என்றது, களத்தின் கொடுமை யைக் காட்டுதற்கு உரு எழு- அச்சம் எழுதற்கு ஏற்ப உருவம் அமைந்த தன்மை, கூளியர் - குட்டைப் பேய்கள். குருதிச் செம்புனல் - குருதியாகிய செம்புனல். வளன் . வெற்றி, பிற வளங்களும் ஆம்.

'பருந்தும், எழாலும், பேய்களும் உண்டுகளிக்கப் பெரும் போரிடைப் பலர் பட்டு வீழ்ந்தனர்; அவ்வுடலங்கள் வரிசை வரிசையாகக் குவிந்துகிடக்க நிலமும் சரிந்தது' என்பது, கொடிய போரினது நிகழ்வைக் காட்டும்.

களிறுகள் பலவற்றின் துதிக்கைகள் துண்டிக்கப்பட்டு வீழ்ந்ததனைப் 'பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன் யானைபட்ட' எனக் கூறும் உவமை நயத்தை அறிந்து இன் புறுக.