பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

பதிற்றுப்பத்து தெளிவுரை

130 பதிற்றுப்பத்து தெளிவுரை

முன்போற் செழுமையுறச் செய்தன. நீதான் மேலும் பல வெற்றிகளைப் பெறுவதற்குக் காரணமான சிறந்த ஒரு வெற்றியினையும் அதன்மூலம் பெற்ருய். கரிய பெரிய பனந் தோட்டு மாலையினையும், சிறந்த கழலினையும் புனைந்து சென்று, பகைவரது நிலைபெற்ற அரணின அழித்து வென்முய். அப் பகைவரது வீரர்களைச் சிறைப்பற்றிக் கொணர்ந்தாய். தொன்மையான நிலையைக் கொண்ட சிறப்பிளுேடு, நின் நிழலிலே வாழ்பவருக்கு ஒப்ப, அவருக்கும் கொடுமை இல்லாதபடி அவரையும் திருத்தி வைத்த மாறுபடாத கொள்கையினையும், மற்றும் நற்பண்புகளையும் நீ மிகப் பெரிதும் உடையை! இவற்ருல் வெவ்விய திறனமைந்த வேந்தனே! இவ்வுலகத்தோரின் பொருட்டாக நின் வளனும், நின் வாழ்நாளும் என்றென்றும் நிலைத்து வாழ்வனவாகுக!

சொற்பொருளும் விளக்கமும் : வாழ்க்கை - வாழ்நாள். வாய்மொழி - வாய்மை பிறழாத சொல். 'வாயர்-வாய்மை பேசுவோர்; புலவர்: இவர் பொய்யா நாவினர். பழங்கண் . துன்பம். ஆர - நிரம்பப் பெற. நகைவர் - அன்புடையார்: இவர் பாணரும் கூத்தருமான பரிசிலர். கலம் அணிகலம். சிதறி . எடுத்து வீசி: இது அவன் அளித்த மிகுதியைப் புலப் படுத்துவது. நல்லிசை - நற்புகழ். ஆன்று - அமைந்து. அவிந்து - பெரியோரைப் பணிந்து. அடங்கல் - புலனடக்கம் கொள்ளல். இதனை, ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்ருேர் எனவரும் புற்ப்பாட்டாலும் அறிக (புறம் 191). உலகமோடு உயிர்த்தல் - உலகம் உள்ளளவும் நிலைபெறுதல். துளங்கு குடி - வீழ்ந்த குடி, கெட்டகுடி. திருத்தல் - உயரப் பண்ணல். புடையல் - மாலை; இருபுடையும் தூங்கவமைந்த நெடிய மாலை. மாக்கழல் - சிறந்த வீரக்கழல். மறவர்' என்றது பகைநாட்டு மறவரை. தரீஇ கைப்பற்றிக் க்ொணர்ந்து. கோடற வைத்தல் - அறவே கொடுமையில் லாதபடி பேணி வைத்தல். கொள்கை - கோட்பாடு. வெந்திறல் வெம்மையான பேராற்றல், பகைவரையழிக்கக் கருதிய போதும்; "சீர்சால் செம்மல் வேண்டியவர்க்கு அருளும்போதும் எனக் கொள்க நன்று . நற்பண்புகள். உலகத்தோர்க்கு - உலகத்தோர்க்காக; அவர் வாழுமாறு.