பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

பதிற்றுப்பத்து தெளிவுரை

132 பதிற்றுப்பத்து தெளிவுரை

இடங்கள் சிதைந்து அழியுமாறு, நீதான் நின் யானைப் படைகளைச் செலுத்தும் மறவரை ஏவினை. நின் ஏவலின் படிக்குச் சென்ற அவரும், அவ்வாறே அவற்றை வென்று, அந் நாடுகளின் காவலையும் நினக்குத் தந்தனர். அத்தகைய தொடியணிந்த மருப்பினையுடைய யானைப்படையும், சிவந்த பிடரிமயிரைக் கொண்ட செருக்குடைய குதிரைப்படையும் உடையோனே! பொன்ற்ை செய்த உயர்ந்த கழலையும், செயற்பாடமைந்த கண்ணியையும் அணிந்த சேரநாட்டு மறவர்க்கு வேந்தனே! பரிசின் மாக்கள் வாழ்வதற்கு வேண்டும் செல்வமாக விளங்குவோனே! பாணர்கள் பாடிப் போற்றும் நாளோலக்கத்தை உடையவனே! ஒளிபொருந்திய நுதலை உடையாட்குக் கணவனே! போர்வீரர்க்குள் சிங்க வ்ேறு போன்றவன்ே குற்றமற விளங்கிய போர்ப்புண்ணின் வடுவானது நிலைத்திருக்கும் மார்பினைக் கொண்டோனே! குற்றமற்ற செல்வத்தை உடையோனே! வானவரம்பன்' என்னும் பெயரைக் கொண்டோனே! இனியவையான பல பொருள்களைப் பெற்றனமாயின், அவற்றைத் தனித்தனியாக யாமே நுகர்வோம்; எம்பால் அவற்றைத் தருக" என்று தானே கொள்ளுதற்கு விரும்பாத, கெடாத நெஞ்சத்தைக் கொண்டோனே! பிறருக்குப் பகுத்துண்ணும் உணவைத் தொகுத்து. அனைவருக்கும் பகுத்துத் தந்த ஆண்மையாளனே! நீதான் பிறர்க்கெனவே வாழ்கின்றன. ஆதலினலே, உலகத்தே வாழ்வோருட் செல்வம் உடையோர் பலராயினும், அவர் எல்லாரும் பெற்றுள்ள புகழ்களுள் நின் நல்ல புகழே மேம்பட்டு நிற்கும்; இதனை அறிவாயாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : நல்லிசை - நல்ல செயல் களாலே வந்தடையும் புகழ். தலைமயங்கல் - ஒன்று கலத்தல். எயின் முகம் - மதிலிடம். தோட்டி - அங்குசம்: அதைக் கொண்டு களிற்றைச் செலுத்தும் மறவர்க்கு ஆயிற்று. தோட்டி - காவல். தொடி - பூண். . உளே - பிடரி மயிர். கலி - மனச் செருக்கு. வான் கழல் சிறந்த கழல்; சிறப்பு போர் வெற்றியால் வந்தது. ஈகை - பொன். செயல் - செயற்பாடு. சேரலர் . சேரநாட்டார்: சேர நாட்டு மறவரும் ஆம். வாள் . ஒளி. மள்ளர் - போர் மறவர். மை - குற்றம் குற்றமாவது புறப்புண்படல். வடு - புண் காய்ந்த தழும்பு. வாழ் மார்பு - நிலைத்திருக்கும் மார்பு, வசை, வசைச் சொல்; குற்றம். வானவரம்பன்பெயர். இனியவை . இனியவான பல பொருள்கள். விழைதல் - விரும்பல். தாவு - கெடுதல். பகுத்துரண்