பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் வத்து • 189

சொற்பொருளும் விளக்கமும் : போர் முரசம் இன்னிசை இமிழ்தல் ஆவது,போர் விருப்புடையவரான மறவர்க்கு அது இனிதான இசையாகி விளங்குதலால். கடிப்பு - குறுந்தடி: குணில். இகூஉ - புடைத்துக் கொண்டு. புண்தோள் ஆடவர் - முரசைச் சுமந்து சுமந்து தோளிற் புண்பட்ட முரசு முழக்கும் தொழிலோர். போர்முகத்து - போரின் ன்னணிப்புறத்து. இறுப்ப - நிற்க. கரந்தை - கரந்தைச் சடி. மாக்கொடி - கரிய கொடி. விளைவயல் - நெல் விளையும் வயல். இறை கொள்ளல் . தங்கல். களைநர் . துன்பங் களைவோர். பிறர் . தம் மன்னரல்லாத பிறர்; தம் மன்னராற் காக்கவியலாது என்று முடிவுசெய்ததனல், களைநர் பிறர் யார்?' என்று கருதலாயினர். பேணி . தம் உயிரைப் பேணியவராக. ஒன்ஞர் - பகைவர். ஒலி அவிந்து. அடங்க - ஒலியவிந்து ஒடுங்கிக் கிடக்க: இஃது அவரும் அஞ்சியவராகத் தளர்ந்தமை கூறியதாம். எயிற் புறத்துப் போர், அதற்குரிய பகைவர் அஞ்சியகலுதலால் நிகழாதேயே சேரலுக்கு வெற்றியாக முடிந்தது என்பதாம்.

பூ - தும்பைப்பூ மலைந்து - குடி உரைஇ - வஞ்சினங் கூறி. தோடு - பனந்தோடு. நிரைஇய - வரிசையாக வைத்துக் கட்டிய அருஞ்சமம் - வெல்லுதற்கரிய போர். . கொன்று . அழித்து. போர் தொல்லல் - போரிடற்கு வந்த படைமறவரை அழித்தல்: போரூக்கத்தைக் கெடுத் தலும் ஆம். புறம் பெறல் - பகைவர் புறமிட்டு ஒடுதலை மேற்கொள்ளுமாறு போரிடல், மன்பதை - மறவர் கூட்டம்: இவர் சேரநாட்டுக் காவன்மறவர்; பக்ைவரால் அவ் விடத்தை விட்டு ஒட்டப் பெற்றவர். வென்றியாடல் . வெற்றிகொண்டு, அக் களிப்பாலே தோளோச்சி யாடல். திரு - வெற்றித் திருமகள். பொலந்தேர் - அழகிய தேர். கடிவாகை - காவல்மரமான வாகை. முதல் - அடிமரம். தார் . தூசிப்படை.

உன்னம் - உன்னமரம். சாய - சாய்ந்துகாட்ட வறிது. சிறிது. அரியல் - அரித்துக் கூட்டிய தெண்கள் தெளி வாகிய கள். நீர் . அருவிநீர். சிலம்பு - மலை. நேரியோன்நேரிமலேக்கு உரியவன்.

வயங்கிழையணிந்து, மலர்ந்த வேங்கையின் எழில் தலஞ் சிறப்ப' என்று கொள்ளுதலும் பொருந்தும். களி . களிப்பு. வியன் களம் - பரந்த போர்க்களம். தொழில் - போர்த்தொழில். புகல் - விரும்பும் விருப்பம். சினங்