பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

பதிற்றுப்பத்து தெளிவுரை

፳፻፹0 பதிற்றுப்பத்து தெளிவுரை

கொண்ட யானைகள் காலாற் கிளைத்துச் சிதறலால் எழுந்த புழுதிப் படலமானது, காட்டுத் தீயை நாடனத்தும் காணு மாறுபோல. நாடன்ைத்தும் காணக்கூடிய் தன்மைத் தாயிருந் தது என்பதாம். இச் சிறந்த உவமையால் இப் பாட்டு நாடு காண் அவிர் சுடர் எனப் பெற்றது. *

இப் பாட்டின் 17ஆவது அடியில் "உன்னம் சாய' என்று உருவதனை உன்னநிலை என்னும் துறைக்கு உரியதாகவும் கொள்வார்கள். உன்ன நிலை என்ப்து ப்ேரரிலே வெற்றி பெறுவோமா என்று படை மறவர்கள் நிமித்தம் பார்த்தல் ஆகும். இது வேந்தன் ஏவலாற் செய்வதன்று.

'எம் வேந்தனுக்கு நீ வெற்றி கொடுப்பாயாக கொடுத் தால் யாம் நினக்கு இன்னது செய்வோம்' என்று வேண்டிக் கொண்டு பணிதலும் இதில் ஒரு வகையாகும். வேந்தன் வெற்றி பெற்றதும், மற்வர் தாம் சொன்ன்வாறே வந்து பலிக்காணிக்கையைச் செலுத்திப் பலிக்கடன் கழிப்பார்கள்.

'எம் வேந்தனுக்கு ஆக்கம் உண்டாயின் அக் கோடு . பொதுளுக: ப்கைவனுக்கு ஆக்கம் உண்டெனின் க் கோடு படுவதாக என்று குளுரைத்து நிமித்தம் காண்பர் சிலர்.

கோடு பொதுளின் உற்சாகமாகப் போருக்குச் செல் வார்கள். o

கோடு பட்டுப் போமாயின் மனத்தே ஊக்கம் இழந்த விராய்ப் போர்முகம் சென்று, வீரப் போரியற்றி வீழ்ந்து படுவர். --

இப்படி நிமித்தம் காணலும் வேண்டலுமாகிய மர பினுக்கு, "உன்ன்நிலை என்று இலக்கணம் வகுத்திருக் கிருர்கள். =,哆

தொல்காப்பியப் புறத்திணை இயலும். புறப்பொருள் வெண்பாமாலையும் இதன் தகைமையை விள்க்கி உண்ரக் கின்றன.

போர் மறவர்கள் களம்புகுமுன் இவ்வாறு தெய்வ நம்பிக்கையுடன் நிமித்தம் காணும் மரபு, பண்டைத் தமிழர் மேற்கொண்டிருந்த மரபே ஆகும்.

இந் நன்னைேடு இவன் செய்து முடித்த போர் வெற்றி யையே இதன் பதிகமும் எடுத்துக் கூறுகின்றது.