பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

பதிற்றுப்பத்து தெளிவுரை

143 பதிற்றுப்பத்து தெளிவுரை

கெடலருந் தானையொடு கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் மரணம் அமைந்த காசறு செய்யுள் பரணர் பாடினர் பத்துப் பாட்டு.

செங்குட்டுவன் அரசு வீற்றிருந்த காலம் : ஐம்பத்தைந்து ஆண்டுகள். பாடிப் பெற்ற பரிசில் : உம்பற் காட்டு, வாரி யையும் செங்குட்டுவனின் மகளுன குட்டுவன் சேரலையும். பாட்டின் பெயர்கள் : சுடர்வீ வேங்கை, தசும்பு துளங்கு இருக்கை, ஏரு ஏணி, நோய்தபு நோன் தொடை, ஊன் துவை அடிசில், கரைவாய்ப் பருதி, நன்னுதல் விறலியர், பேரெழில் வாழ்க்கை, செங்கை மறவர், வ்ெருவரு புனற்ருர் GT6's LGBT .

தெளிவுரை : வடபுலவரசரும் அச்சமுற விளங்கிய வானளாவிய வெற்றிக்கொடியினைக் கொண்டவன், குட நாட்டாரின் கோமாளுக விளங்கியவன், சேரமான் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனுக்குச் சோழன் மணக் கிள்ளி பெற்றெடுத்த மகள் ஈன்ற மகன் செங்குட்டுவன் ஆவான். இவன் கடவுள் தன்மைபெற்ற பத்தினித் தெய் வத்திற்குச் சிலையெடுப்பதற்குரிய கல்லினைக் கொள்ள விரும் பியவளுகக் கானலைக் கொண்டிருந்த காட்டுவழியே கணையைப்போல விரைந்து சென்ருன். ஆரியரின் தலைவனைப் போரிலே வீழ்த்தினன். பெரும் புகழுடைய இனிய பல அருவி களைக்கொண்ட கங்கையின் தலைப்பகுதிக்குச் சென்ருன். நல்லினத்தைச் சார்ந்தவை எனத் தெரிந்த பல ஆணினங்களை அவற்றின் கன்றுகளோடும் கைப்பற்றிக் கொண்டான். தம் இலக்கு மாருது அம்புகளைச் செலுத்தி வெல்லுகின்ற வலிமையான வில்லாளர்களுடனே இடும்பாவனத்தின் ஒரு புறத்தே பாசறையிட்டுத்_தங்கினன். வலிய புலிபோன்ற வில்லமையாளர்கள் இறந்தொழியுமாறு, சிறிய பூங்கொத்துக் களைக் கொண்டநெய்தல் பூக்களையுடையவியலூரை அழித் தான். பின்னர்க் கரையின் எதிர்ப்புறத்தை அடைந்து அங்கிருந்த கொடுகூரையும் அழித்து வென்முன். 'பழையன்' என்பவன் காத்துவந்த, கருங்கிளைகளைக் கொண்ட வேம் பினது முழவுபோன்ற அடிமரத்தை வெட்டி அவனையும் வென்ருன். தூய மங்கலவணிகளே அதேைல இழந்துபோன வரான பல பெண்டிரின் நறுமணங் கொண்ட பலவாகிய கரிய கூந்தலைக் களைந்து, அவற்ருல் திரிக்கப்பெற்ற கயிற்றி ஞலே யானைகளை வண்டியிற் பூட்டி, அக் காவல்மரத்தைத்